இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{பாண்டியர் வரலாறு}}
'''இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்''' கி.பி. 1251 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்|முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின்]] மகனான (?)/தம்பியான (?) இவன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்திலேயே சோழ நாடு மற்றும் தொண்டை நாடு போன்றனவற்றின் பிரதிநிதியாக இருந்தவனாவான். "திருமகள்வளர்" எனத் தொடங்கும் இவனது மெய்க்கீர்த்திகள் "கொங்கு ஈழங்கொண்டு,கொடுவடுகு கோடழித்து" எனவும் பாடப்பட்டான் இம்மன்னன்.[[விசயகண்ட கோபாலன்|விசயகண்ட கோபாலனின்]] [[சோழ நாடு]] மற்றும் [[ஈழ நாடு]],[[கொங்கு நாடு]] போன்றனவற்றினை வென்ற பெருமையினை உடையவனும் ஆவான். [[பல்லவர்|பல்லவ மன்னனான]] [[இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்|இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை]] வென்று கப்பம் கட்ட வைத்து [[தில்லை|தில்லையில்]] [[வீராபிடேகம்]] மற்றும் [[விசயாபிடேகம்]] போன்றனவற்றினையும் செய்தான்.[[கொடுவடுகு வல்லான்]] என்பவனைவும் வென்று [[தில்லை|தில்லையில்]] உள்ள [[சிவகாமக் கோட்டம்|சிவகாமக் கோட்டத்தின்]] தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் 1267 ஆம் ஆண்டளவில் வீராபிடேகம் செய்தான். அம்மண்டபம் 'வீரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படுகின்றது.
 
[[ஈழ நாடு|ஈழ நாட்டில்]] போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவனுக்கு முடிசூட்டுவித்தான். [[திருகோணமலை]],[[திருகூடமலை]] போன்ற இடங்களில் [[கயற்கொடி]] பொறித்தான்.[[காவிக்களம்|காவிக்களத்தில்]] சோழனுடன் போர் செய்தான். இவன் தனது தந்தையான [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்]] ஆணைவழி ஆட்சி மற்றும் போர் யுக்திகளினை செய்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனது 23 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு [[புதுக்கோட்டை|புதுக்கோட்டையிலும்]] 28 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு [[நெல்லை|நெல்லையில்]] உள்ள [[கல்லிடைக்குறிச்சி|கல்லிடைக்குறிச்சியிலும்]] உள்ளன.கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் [[வீரமரணம்]] அடைந்தான் என்பது வரலாறு.
 
== ஈழப்போர் ==
தற்போதைய [[தாய்லாந்து]] பகுதியை சேர்ந்த [[சந்திரபானு]] என்னும் அரசன் ஈழத்தின் மீது படையெடுத்து அதில் இருந்த தமிழர்களின் வடபகுதியை 1255 ஆம் ஆண்டு வென்றான். அவன் ஈழத்தின் தென்பகுதியை கவரும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இக்காலத்தில் சந்திரபானுவின் மகனான [[சாவகன் மைந்தன்]] தாய்லாந்து நாட்டின் தாமிரலிங்க பகுதியை ஆண்டு வந்தான். 1255 ஆம் ஆண்டு வீரபாண்டியனின் அண்ணனான [[முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்]] ஈழத்தின் மீது படையெடுத்து [[சந்திரபானு]] அரசனை தோற்கடித்தான். ஆண்டுக்கு வரியாக பல விலை உயர்ந்த ஆபரணங்களையும் யானைகளையும் பெற்றது பாண்டிய அரசு. மீண்டும் சந்திரபானுவுக்கும் பாண்டியர்களுக்கும் போர் ஏற்பட வீரபாண்டியன் தலைமையில் 1262 ஆம் ஆண்டு முதல் 1264 ஆம் ஆண்டு வரை போர் போர் நடந்தது. அதில் சந்திரபானு கொல்லப்பட்டான். வெற்றியின் நினைவாக வீரபாண்டியன் பாண்டியர் சின்னத்தை திரிகூடகிரியிலும் திரிகோணமலையினும் பொறித்தான். குடுமியான்மலை கல்வெட்டு பாண்டியர் பெற்ற இந்த போர் வெற்றியில் கொண்டுவந்த செல்வங்களை கூறுகிறது.
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_சடையவர்மன்_வீரபாண்டியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது