மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 34:
}}
 
'''மூணார்''' தமிழகத்தின் அருகிலுள்ள தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள, கேரளத்தின் தெற்கத்தியதென் மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். மூணார் தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியே இங்குள்ள முக்கியமான தொழில் ஆகும். முதிரப்புழை (இடமலையாறு), நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாராகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. உதகமண்டலம், கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத்கோடை தலம்வாழிடம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. ஜான் டேணியல் முன்றோ என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே தோட்டப்பயிர் செய்ய வழிவகுத்தார் . அவர்வர் பெயரில் உள்ள முன்றோ என்பதே மருவி பின் நாளில் மூணார் என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது, போதிய ஆதாரம் இல்லை.
 
== வரலாறு ==
இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை விசாயத்தைபயிரிடத் தொடங்கினர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் பிரசித்துபுகழ் பெற்றது.<ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1015705 தினமலர்]</ref>
 
== சுற்றுலா ==
வரிசை 43:
[[படிமம்:Mattupetty Dam reservoir, near Munnar, Kerala.jpg|left|300px|[[மாட்டுப்பட்டி அணை]], மூணாறு அருகில்.]]
 
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி. 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணார் எனப் பெயர் பெற்றது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூணார் மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. தென்னிந்தியாவின் மூன்றாவது உயர மலையான சொக்கர்முடி மலை லோக்கார்ட் எஸ்ட்டேட்டின் (Lockhart Estate) ஓர் எல்கையாகும். ராஜமலைத் தொடரில் அழிந்துவரும் விலங்கினமான வரையாடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளது. மூணார் வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது.
 
=== முக்கிய சுற்றுலா தலங்கள் ===
வரிசை 56:
* லோக்கார்ட்  கேப் வியூ பாயிண்ட் (Lockhart Gap View Point)
* கள்ளன் குகை (Kallan Cave)
* பெரியகானல் நீர்வீழ்ச்சிஅருவி (Periyakanel Water Falls)
* ஆணையிரங்கல் அணை (Anayirangal Dam)
* லுக்காம் அருவி(luckam water falls)
* வாகுவரை தேயிலை தோட்டம் (vaguvarrai estate)
 
மூணாரில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாருக்கு தமிழகத்திலிருந்து [[மதுரை]], [[தேனி]], [[கோவை]], [[உடுமலைப்பேட்டை]], [[சென்னை]]யிலிருந்தும், கேரளத்தின் முக்கிய ஊர்களான [[கொச்சி]], [[அலுவா]], [[திருவனந்தபுரம்]] ஆகிய ஊர்களில் இருந்து பேருந்தின் வாயிலாக செல்லலாம். கர்நாடக மாநிலம் பங்களூரிலிருந்துபெங்களூரிலிருந்து பேருந்து சேவை உள்ளது. [[போடிநாயக்கனூர்]] என்ற ஒரு மழைமறைவு நகரிலிருந்து 2 மணித்தியாலத்தில்மணி நேரத்தில் சிற்றுந்தில் செல்லக்கூடிய வசதி படைத்ததுசெல்லலாம்.போடியில் இருந்து மூணாறு சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது
 
இந்த நகரை அடையும் முன்னர் [[போடி மெட்டு]] என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.
வரிசை 67:
1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக [[முருகன்]] கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
 
தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக [[தமிழர்]]கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.Here Bro.Abraham and team are doing a great work ,in vaguvarrai and on other places orange and pepper and fresh tea are available in vaguvarrai shops
 
{{wide image|Munnar tea gardens.jpg|1500px|மூனாறு தேயிலைத் தோட்டங்கள்'''}}
"https://ta.wikipedia.org/wiki/மூணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது