சிற்றூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Indianvillage.jpg|thumb|right|250px|ஒரு இந்தியச் சிற்றூர்]]
 
'''சிற்றூர்''' (''hamlet'') என்பது ஒரு சிறிய ஊரைக் குறிக்கும். இது ஒரு [[ஊர்]] (Village''village'') என்று சொல்லக்கூடிய அளவுக்குப் பெரிதாக இராத ஒரு நாட்டுப்புறக் [[குடியிருப்பு]] ஆகும். இது [[நகரம்]] (Town''town'') மற்றும் [[மாநகரம்]] (City''city'') அல்லது [[பட்டினம்|பட்டினத்தை]] விட மிகவும் சிறியது. இவை பொதுவாக [[வேளாண்மை]], [[சுரங்கத் தொழில்]], [[மீன்பிடித் தொழில்]] போன்ற ஒற்றைப் பொருளாதார நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும்.
 
==வரைவிலக்கணம்==
 
சிற்றூர் என்பதற்கு உலகம் தழுவிய பொதுவான வரைவிலக்கணம் எதுவும் கிடையாது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில், தமக்கெனத் [[தேவாலயம்]] ஒன்றைக் கொண்டிருக்கக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடையாத குடியிருப்புக்கள் சிற்றூர்கள் எனப்பட்டன. சிறப்பாக, [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]], தமக்கெனத் தனியான கிறித்தவக் [[கோயில்பற்று]]ப் பிரிவைக் கொண்டிராமல் இன்னொரு ஊரின் கோயில்பற்றுப் பிரிவில் அடங்கும் குடியிருப்புக்களைச் சிற்றூர் என்றனர்.
 
==வேறுபடுத்தும் வழிமுறைகள்==
[[Image:Waldkirch Oberwil.jpg|thumb|250px|சுவிட்சர்லாந்திலுள்ள ஆபர்வில் என்னும் ஒரு சிற்றூர்]]
சிற்றூர்களையும், ஊர்களையும் வேறுபடுத்துவதற்குப் பல வழிமுறைகள் பயன்படுத்தப்படுவது உண்டு. இவற்றுள், :
 
# குடியிருப்பின் அளவு,
# செயற்பாடு,
# தங்கியிருக்கும் தன்மை .
 
என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேறுபடுத்துதல் முக்கியமானவை.<ref>ராபர்ட்சு, பிரையன். கே; 1987. பக். 13, 14</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிற்றூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது