சா. ஞானப்பிரகாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{cleanup}}
பன்மொழிப் புலவர் '''சுவாமி ஞானப்பிரகாசர்''' [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தை]] ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான 6 ஆவது [[பரராஜசேகரன்|பரராஜசேகரனின்]] பரம்பரையைச் சேர்ந்தவரான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தவராவார்.
 
இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். சுவாமி ஞானப்பிரகாசருக்கு 5 வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். சிறுவன் வைத்தியலிங்கம் பிற்காலத்தில் மொழியியறிவில் ஞானியாக, தமிழ் சமூகத்திற்கு பிரகாசமாக இருப்பார் என்ற சிந்தனையில் என்னவோ அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அன்னையும் மைந்தனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] மதத்தைமதத்தைத் தழுவினர்.
 
[[அச்சுவேலி|அச்சுவேலியில்]] அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கில பாடசாலையொன்றில் ஆரம்ப கல்வியைக் கற்ற அவர், [[யாழ்ப்பாணம் புனித பத்தரிசியார் கல்லூரி|யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில்]] கல்வி பயின்றார். 1893 இல் புகையிரதப் பகுதியில் இலிகிதர் பரீட்சையில் முதலாவதாக தேறி கடிகமுகவயிலும் பின்னர் [[கொழும்பு|கொழும்பிலும்]] 3 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைபணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சா._ஞானப்பிரகாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது