பொருளியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
[[File:GDP growth (annualized).png|thumb|400px|1990 முதல் 2007 வரையிலான நாடுகளின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|ஜிடிபி]] வளர்ச்சியை காட்டும் உலகப்படம்.]]
{{அறிவியல்}}
பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், [[லயனல் ராபின்ஸ்|இலயனல் இராபின்சு]], [[பவுல் சாமுவேல்சன்]] என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை.
 
;செல்வம் பற்றி ஆராயும் இயல்:
துவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. ''செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல்'' என்று வரையறுக்கப்பட்டது.
 
;பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல்:
1890ஆம் ஆண்டில் [[ஆல்பிரடு மார்ஷல்]] பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர்- நுகர்வோர், சேமிப்பாளர்- முதலீட்டாளர், முதலாளி- தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் ''நலப் பொருளாதாரம்'' எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது.
 
;கிடைப்பருமை பற்றிய இயல்:
பேராசிரியர் [[லயனல் ராபின்ஸ்]] அவர்களினால் ''பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள்'' (1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:
<br>
"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, [[கிடைப்பருமை|கிடைத்தற்கு அருமையான]] [[வளங்கள்|வளங்களைக்]] கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்".
<br>
இங்கு கிடைத்தற்கு அருமை ([[கிடைப்பருமை]] ) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு [[பொருளியல் கேள்விகள்]] எழாது. இந்த வரைவிலக்கணம் ''கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம்'' எனப்படுகிறது.
;புதுக்கெய்னீசிய பொருளியல்:
தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக [[பவுல் சாமுவேல்சன்|சாமுவேல்சனின்]] பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொருளியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது