"ஆத்திரேலியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
| official_languages = [[ஆங்கிலம்]]<sup>2</sup>
| capital = [[கன்பரா]]
| Gemstone = ஓப்பல் (''opal'')
|latd=35 |latm=18 |latNS=S |longd=149 |longm=08 |longEW=E
| largest_city = [[சிட்னி]]
=== ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ===
{{Main|ஆஸ்திரேலியப் பழங்குடிகள்}}
ஆஸ்திரேலியாவின் முதல் மனிதர் குடியேறியது 42,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்னர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref>Gillespie, R. (2002). Dating the first Australians. ''Radiocarbon'' 44:455–72; {{cite web|url=http://www.ingentaconnect.com/content/arizona/rdc/2002/00000044/00000002/art00004|title=Dating the First Australians|publisher=Ingenta|accessdate=2008-03-18}}</ref>. இவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்|பழங்குடிகளின்]] மூதாதையர் என அறியப்படுகிறது. இவர்கள் [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்தில் லெக்முங்கோ (''Laje Mungo'') என்னுமிடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கற்காலத்திற்கு முன்பிருந்து மனிதர்கள் வசித்தாலும் அவர்கள் தற்போதைய [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]]த் தீவுகளிலிருந்து மிகப்பழங்காலத்தில் பிரிந்தவர்களாகத் நம்பப்படுகிறது. [[மரபணு]] மற்றும் [[மொழி]] அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் (பிற நாட்டினத்தவர்களுடன்) உறுதிப்படவில்லை. இப்பழங்குடினரில் பெரும்பான்மையானோர் வேட்டையாடுபவர்கள். [[குயின்ஸ்லாந்து|குயின்ஸ்லாந்தின்]] தூர-வடக்கிலும், [[டொரெஸ் நீரிணைத் தீவுகள்|டொரெஸ் நீரிணைத் தீவுகளிலும்]] வாழும் பழங்குடியினர் [[மெலனேசியா|மெலனேசியர்]]கள். இவர்களின் [[பண்பாடு]], வாழ்க்கை முறை ஏனைய பழங்குடியினரை விட வேறுபட்டவை.
 
[[படிமம்:Endeavour replica in Cooktown harbour.jpg|left|thumbnail|''பார்க் எண்டெவர்'' என்ற கப்பலில் [[1770]] இல் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையில் வந்திறங்கிய கப்டன் [[ஜேம்ஸ் குக்]] அதனை [[பிரித்தானியா]]வுக்காக உரிமை கோரினான்.]]
அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும், இரண்டு மண்டலங்களையும், வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. மாநிலங்களாவன: [[நியூ சவுத் வேல்ஸ்]], [[குயின்ஸ்லாந்து]], [[விக்ரோறியா (ஆஸ்திரேலியா)|விக்டோறியா]], [[தெற்கு ஆஸ்திரேலியா]], [[மேற்கு ஆஸ்திரேலியா]], [[தாஸ்மானியா]] எனபனவாகும். [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலம்]], [[ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம்|ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம்]] என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும்.
 
மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும், மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை நடுவண் அரசு (அவுஸ்திரேலிய அரசாங்கம்) மாற்றியமைக்க முடியும். அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது (சிறப்பு) சட்ட விதிகளை மட்டுமே நடுவண் அரசு மாற்ற முடியும். மருத்துவமனைகள், [[கல்வி]], காவல்துறை, [[சட்டம்]], பாதைகள், பொது போக்குவரத்து, உள்ளூராட்சி சபைகள் (''local government'') போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.
 
ஒவ்வொரு மாநிலமும் மண்டலங்களும் தமக்கென தனியான சட்டசபைகளை (நாடாளுமன்றங்களை) கொண்டுள்ளன. இவற்றில் வட மண்டலம், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், குயின்ஸ்லாந்து என்பன ஒரு சட்டசபையையும், ஏனைய மாநிலங்கள் கீழவை, மேலவை என இரு சபைகளையும் கொண்டுள்ளன. மாநிலங்களின் அரசுத் தலைவர் முதல்வர் (''Premier'') எனவும், மண்டலங்களின் தலைவர் முதலமைச்சர் (''Chief Minister'') எனவும் அழைக்கப்படுகின்றனர். மகாராணி தனது பிரதிநிதியாக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநரையும், வட மண்டலத்தில் நிர்வாகியையும் நியமிப்பார்.
 
=== ஊடகங்கள் ===
ஆஸ்திரேலியாவில் இரண்டு பொதுத் [[தொலைக்காட்சி]] சேவைகளும் ([[ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]], மற்றும் பல்கலாச்சார [[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]]) மூன்று தனியார் தொலைக்காட்சிச் சேவைகளும் இயங்குகின்றன. இவற்றை விட பல தனியார் கம்பியிணை (''cable''), மற்றும் பல இலாப-நோக்கில்லா தொலைக்காட்சிக் சேவைகளும் உள்ளன. மாநிலத் தலைநகரங்கள் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புதினப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. தேசிய அளவில் இரண்டு நாளிகைகள் வெளிவருகின்றன. [[எல்லைகளற்ற செய்தியாளர்கள்|எல்லைகளற்ற செய்தியாளர்களின்]] (''Reporters Without Borders'') 2008 அறிக்கையின் படி, ஆஸ்திரேலியாவின் [[ஊடகச் சுதந்திரம்]] 25வது நிலையில் உள்ளது. [[நியூசிலாந்து]] 7வது நிலையிலும், [[ஐக்கிய அமெரிக்கா]] 48வது நிலையிலும் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கான இவ்வளவு குறைந்த மதிப்பீட்டிற்கு இந்நாட்டில் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இரண்டு பெரும் வர்த்தக நிறுவனங்களான [[நியூஸ் கார்ப்பரேசன்]], மற்றும் [[ஜோன் ஃபெயார்பாக்ஸ்]] நிறுவனங்களைச் சார்ந்தே இருப்பது காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது<ref>Barr, Trevor. "[http://www.australianpolitics.com/issues/media-ownership/1999ownership.shtml Media Ownership in Australia]</ref>.
 
[[படிமம்:Afl ruckwork.jpg|thumbnail|upright|clear:both|[[விக்டோரியா (ஆஸ்திரேலியா)|விக்டோரியா]]வில் ஆரம்பிக்கப்பட்ட [[ஆஸ்திரேலிய விதிகள் காற்பந்தாட்டம்]] ஆஸ்திரேலியாவில் புகழ் பெற்ற ஒரு விளையாட்டு]]
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2604256" இருந்து மீள்விக்கப்பட்டது