விக்கிப்பீடியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
விக்கிப்பீடியாவின் ஆரம்ப காலத்தில் நுபீடியா, ஸ்லாஷ்டாட் ([[:en:Slashdot]]) பதிவுகள், [[வலை தேடு பொறி]] குறியீட்டு ஆக்கங்கள் போன்றவற்றிலிருந்து பங்களிப்புகளைப் பெற்றுக் கொண்டது. பின்னர் வெவ்வேறு மொழிகளில் விக்கிப்பீடியா உருவாக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டின் முடிவில் கிட்டத்தட்ட 20,000 கட்டுரைகளுடன் 18 மொழிகளில் வளர்ந்தது. 2002 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 26 மொழிகளிலும், 2003 ஆம் ஆண்டு முடிவில் 46 மொழிகளிலும் வளர்ந்த விக்கிப்பீடியா, 2004 ஆம் ஆண்டின் முடிவில் 161 மொழிகளில் இயங்கும் கலைக்களஞ்சியமாக உயர்ந்தது.<ref name="WP early language stats 1">{{cite web |url = https://en.wikipedia.org/wiki/Wikipedia:Multilingual_statistics |title = Multilingual statistics |website = Wikipedia |date = March 30, 2005 |accessdate = December 26, 2008 }}</ref> நுபீடியாவிலிருந்த அனைத்து உள்ளடக்கங்களும் விக்கிப்பீடியாவினுள் சேர்க்கப்பட்டதும், 2003 ஆம் ஆண்டில், நுபீடியாவிற்கான [[வழங்கி]] இல்லாது செய்யப்பட்ட காலம்வரை நுபீடியாவும், விக்கிப்பீடியாவும் ஒன்றுசேர்ந்து இயங்கி வந்தது. செப்டம்பர் 9, 2007 அன்று ஆங்கில விக்கிப்பீடியா 2 மில்லியன் கட்டுரைகளை கடந்து, இது வரை சாதிக்காத வகையில் மிகப்பெரும் கலைக்களஞ்சியமாக, 600 ஆண்டுகள் வரை சாதனையாக விளங்கிய ''யோங்களே'' கலைக்களஞ்சியத்தை (:en:Yongle Encyclopedia), விஞ்சி முன்னேறியது.
<ref name="EB_encyclopedia">{{cite encyclopedia |title = Encyclopedias and Dictionaries |encyclopedia = Encyclopædia Britannica |edition = 15th |year = 2007 |volume = 18 |pages = 257–286 |url = |author1 = <!-- Please add first missing authors to populate metadata.--> }}</ref>
 
விக்கிபீடியாவின் கட்டுப்பாடில்லாத தன்மையாலும், வர்த்தக விளம்பரங்களின் அச்சத்தினாலும், [[எசுப்பானிய விக்கிப்பீடியா]]வின் பயனாளிகள் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விக்கிப்பீடியாவிலிருந்து பிரிந்து என்சிச்லோபெடியா லிப்ரேவை ([[:en:Enciclopedia Libre Universal en Español]]) உருவாக்கினர்.<ref name="EL fears and start 1">{{cite web |title = [long] Enciclopedia Libre: msg#00008 |url = http://osdir.com/ml/science.linguistics.wikipedia.international/2003-03/msg00008.html |website = Osdir |accessdate = December 26, 2008 |deadurl = yes |archiveurl = https://web.archive.org/web/20081006065927/http://osdir.com/ml/science.linguistics.wikipedia.international/2003-03/msg00008.html |archivedate = October 6, 2008 |df = mdy-all }}</ref> அதனால், அந்த ஆண்டின் இறுதியில், விக்கிப்பீடியா விளம்பரங்களைக் காட்டாது என்றும் அதன் இணையதளம் wikipedia.org என்ற வலைதளத்துக்கு மாற்றம் செய்துவிட்டதாகவும் ஜிம்மி வேல்ஸ் அறிவித்தார்.<ref name=Shirky>{{cite book |author = Clay Shirky |authorlink = Clay Shirky |title = Here Comes Everybody: The Power of Organizing Without Organizations |date = February 28, 2008 |publisher = The Penguin Press via Amazon Online Reader |url = https://www.amazon.com/gp/reader/1594201536/ref=sib_dp_srch_pop?v=search-inside&keywords=spanish&go.x=0&go.y=0&go=Go%21 |isbn = 978-1-59420-153-0 |page = 273 |accessdate = December 26, 2008 }}</ref>
 
யாரும் இலகுவில் வேகமாக இணையத்தொடர்பையும் [[உலாவி]]யையும் மட்டும் பயன்படுத்தித் தொகுக்கக்கூடியவாறு இத்திட்டம் அமைந்துள்ளது. அனைத்து மனித அறிவும், கட்டற்ற முறையில் மொழிகளைக் கடந்து, எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்” என்பதே விக்கிப்பீடியாவின் உயரிய நோக்கமாகும். இத்திட்டம் இலாப நோக்கமற்றது, பக்கச் சார்பற்றது, [[விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு|நடுநிலைமையை]] வலியுறுத்துவது. இதன் நுட்ப கட்டமைப்பும், கட்டற்ற திறந்த வழியில் ஆக்கப்பட்டு உபயோகிக்கப்படுகின்றது
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது