படு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
== நடு ஐரோப்பிய படையெடுப்பு ==
குமன் அகதிகள் ஹங்கேரிய ராஜ்ஜியத்தில் தஞ்சம் அடைகின்றனர். ஹங்கேரியின் மன்னர் நான்காம் பெலாவுக்கு குறைந்தது ஐந்து தூதர்களை படு அனுப்புகிறார் ஆனால் அவர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். கடைசியாக பெலாவிடம் குமன்களைத் திருப்பிக் கொடுக்குமாறு படு கேட்கிறார். பின்னர் ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார்: "உன்னை விட குமன்கள் தப்பிப்பது எளிது... நீ வீடுகளில் வாழ்கிறாய் மற்றும் நிலையான நகரங்கள் மற்றும் கோட்டைகளை கொண்டுள்ளாய், எனவே எப்படி என்னிடம் இருந்து தப்பிப்பாய்"?<ref>Michael Prawdin, Gerard (INT) Chaliand ''The Mongol empire'', p.262</ref> பிறகு "எல்லையில் இருக்கும் கடலை" அடைய படு முடிவு செய்கிறார், அதற்கு மேல் மங்கோலியர்களால் செல்ல முடியாது. எதிர்காலத்தில் தனது பகுதிகளுக்கு ஐரோப்பியர்களால் ஆபத்து வரக்கூடாது என படு நினைத்ததாக தற்கால வரலாற்று ஆசிரியர்கள் ஊகிக்கின்றனர். எனவே தான் தனது படைப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று அவர் நினைத்தார். தனது படைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திய பிறகு மற்றும் தனது படைகளுடன் தயாரானவுடன் படு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்ற நினைத்தார் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர்.
 
பல்வேறு உருசிய இளவரச நாடுகளை அழித்த பிறகு ஐரோப்பாவின் இதய பகுதியை தாக்குவதற்கு தயாராவதற்காக சுபுதை மற்றும் படு ஆகியோர் போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியா வரை ஒற்றர்களை அனுப்பினர். ஐரோப்பிய சாம்ராஜ்யங்களை பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை பெற்ற பிறகு அவர்கள் தாக்குவதற்கு அற்புதமாய் தயாரானார்கள். அனைத்திற்கும் படு கான் தான் தலைவர் ஆனால் ருஸ்ஸுக்கு எதிரான வடக்கு மற்றும் தெற்கு படையெடுப்புகளை போல சுபுதை தான் உண்மையான போர்க்கள தளபதி. மங்கோலியர்கள் ஐரோப்பாவை மூன்று குழுக்களாக தாக்கினர். ஒரு குழு போலந்தை தாக்கி அழிவை ஏற்படுத்தியது. நல்லோன் இரண்டாம் ஹென்றி, சிலேசியாவின் டியூக் மற்றும் டியூட்டோனிக் வரிசையின் தலைவர் ஆகியோர் தலைமை தாங்கிய ஒன்றிணைந்த படையை லெக்னிகா என்ற இடத்தில் தோற்கடித்தது. இரண்டாவது குழு [[கார்பேத்திய மலைகள்|கார்பேத்திய மலைகளை]] கடந்தது. மூன்றாவது குழு [[தன்யூப் ஆறு|தன்யூப் ஆற்றை]] பின்தொடர்ந்தது. ராணுவங்கள் ஹங்கேரியின் சமவெளி பகுதிகளை கோடை காலத்தில் துடைத்தெடுத்தன. 1242 ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் உத்வேகம் பெற்ற அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை ஆஸ்திரியா மற்றும் டால்மேசியா ஆகிய இடங்களுக்கு நீட்டித்தனர். மேலும் மோரவாவை தாக்கினர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/படு_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது