சிவகாமியின் சபதம் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 59:
 
===பகுதி 4:சிதைந்த கனவு===
காலம் உருண்டோடி ஒன்பது ஆண்டுகள் கடந்தன. புலிகேசியுடன் ஏற்பட்ட போரினால் காயமுற்று மரணபடுக்கையில் இருந்த மாமன்னர் மகேந்திர பல்லவர் அதிலிருத்து மீளாமலேயே வீரமரணமெய்தினார். தந்தைக்குப் பின் முடிசூடிய நரசிம்மவர்மர், பாண்டிய இளவரசி வானமாதேவியை மனம்புரிந்திருந்தார். ஆனால் வாதாபியை நோக்கி படையெடுப்பில், அவரது முனைப்பு சிறிதும் குறையாமல் இருந்தது. இதற்கிடையே புலிகேசிக்கும், நாகநந்திக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் அதிகரித்து இருந்தது. தான் நாட்டை துறந்து, பதவியாசையை விட்டு துறவறம் புரிந்தது தவறென்று எண்ணினான். இதன் பொருட்டு பல்லவர்கள் படையெடுப்பை பற்றி தெரிந்தும் அவன் அதைக் கூறாமல் மறைத்தான். இவனது எல்லா மனக்குலப்பத்திர்க்கும்மனக்குழப்பத்திற்கும், சிவகாமி அவனை மணப்பதற்கு சம்மதிக்காமையே காரணமாகும்.
 
புலிகேசி அஜந்தாவில் நடைபெறும் கலாசார விழாவிற்கு சென்றிருந்த வேளையில் பல்லவர் படை வாதாபிக் கோட்டையை சூழ்ந்தது. இதை சற்றும் எதிர்காணா வாதாபி பல்லவரிடம் பணிய முனைந்தது. இதற்கிடைய விபரமறிந்து விரைந்து வந்த புலிகேசியின் படையுடன் கோட்டைக்கு அப்பால் போர் நடந்தது. இதில் மன்னன் புலிகேசி கொல்லப்பட்டான். யாரும் இதை அறியும் முன்பாக நாகநந்தி தன் சகோதரனின் உடலை எடுத்துச்சென்று அதனை சிதையிலிட்டான். பின்பு சுரங்கப் பாதை மூலம் நகரினுள் வந்த நாகநந்தி புலிகேசிபோல் வேடமிட்டு போர்க்களம் வந்தான். முன்னர் அறிவித்த அடிபணியும் அறிவிப்பையும் நீக்கினான். இதனால் கோபமுற்ற நரசிம்ம பல்லவர் வாதாபியை தீக்கிரையாக்க கட்டளையிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிவகாமியின்_சபதம்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது