ஹம்பிறி போகார்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
போகர்டின் பிறந்தநாள் சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது; வார்னர் பிரதர்ஸ் போகர்ட் 1899ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தில் பிறந்ததவர் என்று சொல்கிறது. சிலர் இது இந்த நிறுவனம் தனது நட்சத்திர நடிகரை கவர்ச்சிகரமாக முன்னிறுத்த செய்த ஒரு கட்டுக்கதை என்று நம்புகிறார்கள். இவர்கள் போகர்ட் ஜனவரி 23,1899இல் பிறந்தவர் என்றும் கூறுகிறார்கள். இருந்தாலும் இவர்களின் நம்பிக்கை ஆதரமற்றது என்று கருதப்படுகிறது. போகர்டின் உண்மையான பிறப்பு சான்றிதழ் கிடைக்கவே இல்லை எனினும் அவரது பிறப்பு அறிவிப்பு ஒரு 1900ஆம் ஆண்டின் நியூயார்க் செய்தித்தாளில் ஜனவரி முதல்வாரதில் வந்திருகிறது. இது இவர் 1899ம் ஆண்டு டிசம்பரில் பிறந்திருப்பதை உறுதி செய்யும் வண்ணம் உள்ளது. மேலும் 1900ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும் வைத்து இவர் 1899ல் பிறந்தவர் என்று முடிவுக்கு வரலாம்.
 
போகர்டின் தந்தை ஒரு இதய மற்றும் நுரையீரல் அறுவைநிபுணர். இவரது தாயார், மௌட் ஹம்ப்ரி தொழில்முறை ஓவியர், இவர் தனது ஓவிய பயிற்சியை நியூயார்க்கிலும் பிரான்சிலும் பெற்றார். இவருடன் பயின்ற ஜேம்ஸ் மெக்நீல் விசிலர் பின்பு தி டீலியநேட்டர் எனும் பாசன் சஞ்சிகையின் கலை இயக்குனராக பணியாற்றினார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக பணியாற்றிய ஒரு அதிதீவிர போராளி என்பது குறிப்பிடத்தக்கது. மெலின்ஸ் குழந்தை உணவின் யாவரும் அறிந்த ஒரு தொடர் விளம்பர நிகழ்விற்க்காகநிகழ்விற்காக இவர் ஹம்ப்ரியின் குழந்தை படத்தை பயன்படுத்தினார். இவர் தனது தொழிலின் உச்சத்தில் இருந்த பொழுது ஒரு ஆண்டுக்கு 50,000 டாலர்களை ஈட்டினர். இது அவர்காலத்தில் ஒரு மாபெரும் தொகை. இவரது கணவர் 20.000ஆயிரம் டாலர்களை மட்டுமே ஈட்டினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. போகர்டின் குடும்பம் ஒரு அப்பர் வெஸ்ட் சைட் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தது. இவர்களுக்கு அப்பர் நியூயார்க்கில் கனன்டைகுவா ஏரியில் ஒரு 55 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு காட்டேஜும் இருந்தது. ஹம்ப்ரியின் இளம் பருவத்தில் தனது நண்பர்கள் பட்டாளத்துடன் இந்த ஏரிக்கரையில் நாடகங்களை நடிப்பார்.
 
ஹம்ப்ரி குடும்பத்தின் மூத்தமகன் இவருக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். இவர்களின் முதல் சகோதரி பிரான்சஸ் மூன்றாவது சகோதரி காதரின் எலிசபத் (கே). இவரது பெற்றோர் ரொம்ப சீரான வாழ்க்கை முறையை கொண்டவர்கள். இருவரும் தங்கள் துறைகளில் மூழ்கியிருந்தனர். அடிக்கடி ஒருவரோடு ஒருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தனர். இதனை அவர்கள் குழந்தைகள் மீதும் பிரதிபலித்தனர். "நான் உணர்வுரீதியாக வளர்க்கப்படவில்லை ஆனால் மிக நேர்மையாக வளர்க்கப்பட்டேன், எங்கள் குடும்பத்தில் முத்தம் ஒரு அரிதான நிகழ்வு.
"https://ta.wikipedia.org/wiki/ஹம்பிறி_போகார்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது