மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 137:
செழிப்பான பிறை போன்ற வடகிழக்குப் பகுதியானது டைக்ரிஸ், யூப்ரதிஸ் நதிப் பள்ளத்தாக்குகள் மற்றும் நைல், ஜோர்டான் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய வளமான பகுதியாகும். எனவே ஆற்றுப் பகுதிகள் வளமிகுந்ததாகவும் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருந்தன. தண்ணீருக்குத் தொலைவில் இருந்த பகுதிகள் வறண்டதாகவும் குடியேற முடியாததாகவும் இருந்தன. எனவே மெசொப்பொத்தேமியாவில் குடியேறிவர்களுக்கு நீர்ப்பாசன வளர்ச்சி மிகவும் இன்றியமையாததாக இருந்தது.
 
அணைகள்மூலம் நீரைத்தேக்கி வைத்ததும் கால்வாய்களை அமைத்ததும் மெசொப்பொத்தேமியர்களின் முக்கிய கண்டுபிடிப்பாகும். பண்டைய குடியேறிகள் வளமான நிலங்களை மரக்கலப்பை கொண்டு பதப்படுத்திப் பார்லி, வெங்காயம், திராட்சை, முள்ளங்கி, ஆப்பிள் போன்ற வற்றை பயிரிட்டனர். இவர்களே முதன் முதலில் "பீர்" "ஒயின்" ஆகியவற்றை உற்பத்தி செய்தனர். இவர்கள் விவசாயத்தில் தின்வாய்ந்தவர்களாக இருந்ததால் விவசாய வேலைகளுக்கு அடிமைகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாமலிருந்தது. ஒரு சில இடங்களில் இதற்கு மாறாக அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். அடிமைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் கலகங்களில் ஈடுபடுதல், தப்பித்துப் போதல் ஆகிய பல இடர்ப்பாடுகள் இருந்தன. இம்மக்களின் வாழ்வாதாரங்களான ஆறுகள் அடிக்கடி வெள்ளப்பெருக்கின் காரணமாக நகரங்களை முற்றிலுமாக அழித்தன. முன்கூட்டியே குறிப்பிட்டுக் கணிக்க முடியாத எதிர்ப்பாராதஎதிர்பாராத இதன் வானிலை விவசாயிகளுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனவே பயிர்கள் மிகவும் சேதமடைந்தன. அதனால் இவர்கள் உணவுக்காகப் பசு, ஆடுகள் போன்ற கால்நடைகளையும் வைத்திருந்தனர். காலப்போக்கில் சுமேரிய மெசொப்பொத்தேமியாவின் தென்பகுதியில் மண்ணில் உவர்ப்புத் தன்மை கூடியதன் காரணமாக வடபகுதியிலிருந்த அக்காடியர்களின் சக்தி வாய்ந்த மையங்களான நகர்ப்புறங்களை நோக்கி இவர்கள் மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.
 
== அரசியல் ==
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது