வோட்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 72:
 
=== காய்ச்சிவடித்தல் மற்றும் வடிகட்டுதல் ===
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் ஓட்காகளின் பொதுவான அம்சம் என்னவென்றால், [[சுவை|நறுமணப் பொருட்கள்]] சேர்ப்பது போன்ற அடுத்த கட்ட செயல்முறைக்கு முன்பாக அவை பலகட்ட வடிகட்டுதலுக்கு உட்படுத்தப்படுவதுதான். சில சமயங்களில் ஓட்காவானது [[காய்ச்சிவடித்தல்|காய்ச்சிவடித்தலின்போது]] [[வடிகலம்|வடிகலத்]]திலும், அதற்க்குக்அதற்குப் பின்பும், [[மரகரி|மரக்கரி]] மற்றும் இதர ஊடகங்கள் மூலம் வடிகட்டப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சட்டத்தின்படி ஓட்கா தனித்தன்மையான மணம், குணம், நிறம் அல்லது ருசியைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம். என்றாலும், பாரம்பரியமாக ஓட்கா தயாரிக்கும் நாடுகளுக்கு இது பொருந்தாது. இந்த நாடுகளில் உள்ள பல மது தயாரிப்பாளர்கள் மிகத் துல்லியமான காயச்சிவடித்தலோடு, அதே சமயத்தில் குறைந்தபட்ச வடிக்கட்டுதலையே பயன்படுத்த விரும்புகிறார்கள். இது, தங்கள் உற்பத்திப் பொருட்களின் தனித்தன்மையைப் பாதுகாக்க அவர்களுக்கு உதவுகிறது.
 
ஓட்காவை காய்ச்சிவடித்து, வடிக்கட்டும் பொறுப்பு உள்ள நபர் "ஸ்டில்மாஸ்டர்" எனப்படுகிறார். சரியான முறை தயாரிப்பு எனில், காய்ச்சிவடித்தலின்போது விளையும் வீண்பொருட்கள் ("fore-shots"; "heads"; "tails") நீக்கப்படுகின்றன. இந்தக் கழிவில் நறுமணமூட்டும் பொருட்களான [[எத்தில் அசிடேட்]], [[எத்தில் லாக்டேட்|எத்தில் லாக்டெட்]] மற்றும் [[பியுசல் ஆயில்|பியுசெல் ஆயில்]] ஆகியவை அடங்கும். திரும்பத் திரும்ப காயச்சிவடிப்பது அல்லது பிராக்ஷனிங் வடிகலம் பயன்படுத்துவதன் மூலம் ஓட்காவின் சுவை மேம்படுத்தப்படுகிறது; தெளிவும் கூட்டப்படுகிறது. [[ரம்]] மற்றும் [[பைஜியு]] போன்ற மது வகைகளில், அவை தனி நறுமணம் மற்றும் சுவை கொண்டிருப்பதற்காக "heads" அல்லது "tails" நீக்கப்படுவதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/வோட்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது