ஸ்டீவன் ஹாக்கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 65:
 
==ஆரம்பக் கல்வி==
1950 இல், அவரது தகப்பனார், தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில், [[ஒட்டுண்ணியியல்]] பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் St Albans, Hertfordshire என்ற இடத்திற்குச் சென்று வாழ்ந்தனர்.{{sfn|Ferguson|2011|p=22}}{{sfn|Larsen|2005|p=xiii}} அவரது குடும்பத்தினர் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.{{sfn|Ferguson|2011|p=22}} அவரது தகப்பனார், ஆக்கிங்கை பிரபலமான Westminster palli School இல் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால் புலமைப் பரிசிலுக்கான பரீட்சைக்குப் போக முடியாமல் ஆக்கிங் நோயுற்றிருந்தமையாலும், அந்தப் பாடசாலைக்கான செலவை உதவித்தொகையின்றி குடும்பத்தினரால் சமாளிக்க முடியாதென்பதனாலும், ஆக்கிங் St Albans School இலேயே தனது கல்வியைத் தொடர்ந்தார்.{{sfn|White|Gribbin|2002|pp=7–8}}{{sfn|Larsen|2005|p=4}} ஆனாலும் அவருக்கு அதில் நேர்மறையான விளைவும் கிடைத்தது. அவருடன் சேர்ந்து அவருக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் பங்கெடுக்கக் கூடிய, வான்வெடிகள் / [[விமானம்|விமான]] மற்றும் [[படகு]] ஒப்புருக்கள் உற்பத்தியில் சேர்ந்து பங்களிக்கக் கூடிய, [[கிறிஸ்தவம்]] மற்றும் [[புலன் புறத்தெரிவு]] போன்றவை பற்றி நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய நெருங்கிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள்.{{sfn|White|Gribbin|2002|pp=14–16}} 1958 இல், அவர்களது [[கணிதம்|கணித]] ஆசிரியரின் உதவியுடன், [[கடிகாரம்|கடிகாரத்தின்]] பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் [[மீளுருவாக்கம்|மீளுருவாக்க]]ப் பாகங்களைக் கொண்டு ஒரு [[கணினி]]யை உருவாக்கினார்கள்.{{sfn|Ferguson|2011|p=26}}{{sfn|White|Gribbin|2002|pp=19–20}}
 
==பட்டப்படிப்பு==
பாடசாலையில் அவர் [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைன்]] என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை.{{sfn|Ferguson|2011|p=25}} ஆனால் பின்னர் நாட் செல்லச் செல்ல, [[அறிவியல்]] பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து, அவரது கணித [[ஆசிரியர்|ஆசிரியரால்]] உந்தப்பட்டு, [[பல்கலைக்கழகம்|பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தைத் தெரிவு செய்தார்.{{sfn|White|Gribbin|2002|pp=17–18}}{{sfn|Ferguson|2011|p=27}}<ref name="Auto2J-5">{{cite news |access-date=5 March 2012 |url=https://www.theguardian.com/news/2007/jan/05/guardianobituaries.obituaries |title=Dick Tahta |work=The Guardian |location=London |date=5 January 2007 |last1=Hoare |first1=Geoffrey |last2=Love |first2=Eric}}</ref> அவரது தந்தையார், கணித்துறையில் மிகக் குறைந்தளவே வாய்ப்புக்கள் இருப்பதனால், ஆக்கிங் [[மருத்துவம்|மருத்துவத்]] துறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும், [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்|ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில்]] கற்க வேண்டும் என்றும் விரும்பினார். அந்த நேரத்தில் கணிதவியல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால், அவர் [[இயற்பியல்|இயற்பியலையும்]], [[வேதியியல்|வேதியியலையும்]] தெரிவு செய்தார். மார்ச் 1959 இல், புலமைப் பரிசிலில் சித்தியடைந்து, தனது 17 ஆவது வயதில், அக்டோபர் 1959 இல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார்.{{sfn|Ferguson|2011|pp=27–28}}{{sfn|White|Gribbin|2002|pp=42–43}}{{sfn|Ferguson|2011|p=28}}
 
முதல் 18 மாதங்கள் அவருக்குப் படிப்பு மிகவும் இலகுவானதாக இருந்தமையால், அது சலிப்பூட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அமைந்தது.{{sfn|Ferguson|2011|pp=28–29}}{{sfn|White|Gribbin|2002|pp=46–47, 51}} அவரது இயற்பியல் ஆசிரியரின் கூற்றுப்படி, இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில், அவர் ஏனையோருடன் இணைந்து கொண்டார். பழம்பெரும் இசை, [[அறிவியல் புனைவு]] போன்றவற்றில் ஈடுபாட்டைக் காட்டி, கல்லூரியின் உற்சாகமூட்டும், பிரபலமான ஒரு உறுப்பினராக மாறினார்.{{sfn|Ferguson|2011|p=28}} அவரது ஒரு மகுதி மாற்றத்துக்குக் காரணமாக அவர் கல்லூரியின் படகுக் குழு, படகு வலித்தல் குழுமம் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொண்டமை அமைந்தது.{{sfn|Ferguson|2011|pp=30–31}}{{sfn|Hawking|1992|loc=p. 44}}
"https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது