அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 190:
 
மயனாகி நின்றானும் வந்து.......................................21
 
 
வந்திதனைக் கொள்வதே ஒக்குமிவ் வாளரவின்
 
சிந்தையது தெரிந்து காண்மினோ - வந்தோர்
 
இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள்
 
பிரான்நீர் உம்சென்னிப் பிறை.....................................22
 
 
பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்
 
இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற
 
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
 
எந்தையா வுள்ள மிது............................................23
 
 
இதுவன்றே ஈசன் திருவுருவ மாமாறு
 
இதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே
 
மின்னுஞ் சுடருருவாய் மீண்டாய்என் சிந்தனைக்கே
 
இன்னும் சுழல்கின்ற திங்கு........................................24
 
 
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே
 
எஙகும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில்
 
ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம்
 
நாமவனைக் காணலுற்ற ஞான்று....................................25
 
 
ஞான்ற குழற்சடைகள் பொன்வரை போல் மின்னுவன
 
போன்ற கறைமிடற்றான் பொன்மார்பி்ன் - ஞான்றெங்கும்
 
மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே
 
அக்கயலே தோன்றும் அரவு......................................26
 
 
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்
 
பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் -முரணழிய
 
ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே
 
பொன்னாரம் மற்றொன்று பூண்.....................................27
 
 
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின்
 
நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம்
 
பொன்முடிமேற் சூடுவதும் எல்லாம் பொறியிலியேற்கு
 
என்முடிவ தாக இவர்...........................................28
 
 
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
 
இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது
 
பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த
 
பேய்க்கோலம் கண்டார் பிறர்.....................................29
 
 
பிறரறிய லாகாப் பெருமையரும் தாமே
 
பிறரறியும் பேருணர்வும் தாமே - பிறருடைய
 
என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார்
 
வன்பேயும் தாமும் மகிழ்ந்து.......................................30
 
 
மகிழ்தி மடநெஞ்சே மானிடரில் நீயும்
 
திகழ்தி பெருஞ்சேமம் சேர்ந்தாய் - இகழாதே
 
யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
 
பேரன்பே இன்னும் பெருக்கு......................................31
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/அற்புதத்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது