ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி a detailed biography and his Teaching added
informationadded
வரிசை 122:
 
"சத்தியம், பாதையேதுமற்ற நிலமாகும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். எந்தவொரு பாதை, மதம், சமயப்பிரிவின் மூலமாகவும் அதை நீங்கள் அணுக முடியாது. இதுவே எனது பார்வை. இதில் நான் பூரணமாகவும், நிபந்தனையற்றும் நிலைகொள்கிறேன். சத்தியம், எல்லையற்றது, பிணைப்புகளற்றது. எந்தவொரு பாதையினாலும் அணுகுவதற்கு சாத்தியமாகாதது என்பதனால் சத்தியத்தை அமைப்பாக நிறுவமுடியாது. அதன் சார்பாக மனிதர்களை ஒரு குறிப்பிட்ட பாதையில் பின்பற்றும்படி வழி நடத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது.−இதை முதலில் புரிந்து கொண்டால் பின்னர் நம்பிக்கையை முன்னிருத்தி ஒரு அமைப்பை நிறுவுதல் எத்தகைய இயலாத காரியம் என்பதை நீங்கள் காண்பீர்கள். நம்பிக்கை என்பது தனி மனிதரை பொறுத்ததாகும். அதற்கென ஒரு பொது அமைப்பை நிறுவமுடியாது, நிறுவவும் கூடாது. நிறுவினால் அது உயிரற்று, ஜடமாகிவிடும். பின் அது மற்றவர்களின் மேல் திணிப்பதற்குள்ள ஒரு சமய கோட்பாடாக, சமயப் பிரிவாக, ஒரு மதமாக ஆகிவிடுகிறது. இதைத்தான் உலகம் முழுவதிலும் செய்ய முயற்சிக்கின்றனர். பலவீனர்கள், தற்காலிகமாக அதிருப்தியுடையவர்கள் ஆகியோருக்காக சத்தியம் ஒரு விளையாட்டுப் பொருளாகி குறுகியதாக்கப் படுகிறது. சத்தியத்தை கீழ்மட்டத்திற்குக் கொண்டுவர முடியாது. மாறாக தனிமனிதர்தான் அதை நோக்கி மேலேறிச் செல்ல வேண்டும். உங்களால் மலைச் சிகரத்தை பள்ளத்தாக்கிற்கு கொண்டுவர முடியாது. சிகரத்தையடைய வேண்டுமெனில், பள்ளத்தாக்கின் ஊடாகச் சென்று, அபாயமிக்க செங்குத்துப் பாறைக்குப் பயப்படாமல், அதை கடந்து செல்ல வேண்டும். சத்தியத்தை தேட ஒரு பொது அமைப்பை நிறுவினால், அது ஓர் ஊன்றுகோலாக, பலவீனமாக, பந்தம் ஏற்படுத்தி அவனை முடக்கிவிடுகிறது. மேலும், அந்த முழுமையான, வரையறையற்ற சத்தியத்தை கண்டுபிடிப்பதிலிருந்து அவனை தடுத்துவிடுகிறது. நீங்கள் வேறு நிறுவனங்களை நிறுவி, வேறு யாரையாவது தலைவராக எதிர்பார்க்கலாம். அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. என் அக்கறையெல்லாம் மனிதனை, பரிபூரணமாக, வரையறைகள் ஏதுமின்றி விடுவிப்பதே."
 
 
"என்னை பொறுத்தவரை ஒரே விஷயம்தான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. அது என்னவெனில், மனிதனை எந்தவொரு வரையறைக்கும் உட்படாமல், முழுமையாக விடுவிப்பதே; சுதந்திரமாக்குவதே -- எல்லாவிதமான பந்தங்களிலிருந்தும், பயத்திலிருந்தும் அவனை விடுவிப்பதே. மாறாக, புதிய மதத்தையோ, புதிய பிரிவையோ, புதிய கோட்பாடுகளையோ, புதிய தத்துவங்களையோ உருவாக்குவதல்ல என் நோக்கம்."
 
அதன் பிறகு 60 ஆண்டுகளாக தன் வாழ்நாள் முழுவதும் உலகப்பயணம் மேற்கொண்டு உலகிற்கு இந்த சத்தியத்தை பற்றி பறை சாற்றி வந்தார்.
வரி 191 ⟶ 194:
 
'''<u>போதனைகளில் சில.</u>'''
 
'''''மகிழ்ச்சி'''''
 
மகிழ்ச்சி என்பது விசித்ரமானது; அதை தேடாதபோதே வருகிறது.
 
This matter of culture, chapter - 4
 
'''''நீயே ஒளி'''''
 
மற்றவர் மூலமாக, உன்னை நீ கற்பதற்கு முற்பட்டால், நீ எப்போதும், இரண்டாம் தர மனிதனாகவே இருப்பாய்.
 
உனக்கு நீயே ஒளியாக இரு.
 
 
'''புகழ்'''
 
நாம் புகழடைய விரும்புகிறோம் -- எழுத்தாளராக, ஒவியராக, அரசியல்வாதியாக, பாடகராக அல்லது விரும்பிய ஒருவராக என்று. ஏன்? ஏனெனில், உண்மையில் நாம் செய்வதை நாம் விரும்புவதில்லை. நீங்கள் பாட்டு பாட, படம் வரைய, கவிதை எழுத விரும்பினால்; உண்மையிலேயே நீங்கள் அதன்மீது அன்புகொண்டால், உங்களுக்கு புகழ் ஒரு விஷயமாக இருக்காது. -Book of Life, Nov 3
 
 
'''சுதந்திரம்'''
வரி 197 ⟶ 218:
 
பல நூற்றாண்டு காலப் பரிணாம வளர்ச்சிக்குப் பின்னரும், நாம் இன்னமும் காட்டுமிராண்டிகளாகவே வாழ்கிறோம். அடுத்தவரைத் துன்பத்தில் ஆழ்த்தியும், கொன்றும், நம்மையே அழித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். விரும்பியபடி வாழ்வதற்கான முழு சுதந்திரம் உள்ளது. அதுவே உலகையும் பாழாக்கிவிட்டது. விருப்பப்படி வாழ்வது சுதந்திரமல்ல. பிரச்சனைகளிலிருந்தும், கவலைகளிலிருந்தும், அச்சங்களிலிருந்தும், இதயத்தின் வலிகளிலிருந்தும், பலநூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் முரண்களிலிருந்தும் விடுபடுவதே மெய்யான சுதந்திரநிலை. அந்த சுதந்திர நிலை தன்னையறிதல் மூலமே தொடங்குகிறது.
 
 
'''''நான் என்ன செய்ய வேண்டும்?'''''
 
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு மற்றவர்கள் யார்?
 
நீங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லித்தருகிறார்கள்.
 
அதே மனப்பான்மையை வாழ்க்கை முழுவதும் நாம் விதைக்கிறோம்.
 
பள்ளியில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித்தருகிறார்கள். கல்லூரியில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். பல்கலைக் கழகத்திலும் அவ்வாறே. வாழ்க்கை முழுமைக்கும் ─ இது சரி, இது தவறு, இதை செய், அதை செய்யாதே என்று மற்றவர் உங்களுக்கு சொல்கிறார்கள்.
 
அப்படியென்றால், என்ன அர்த்தம். சுய விசாரணை என்பதே நடைபெறுவதில்லை.
 
உண்மையில், "ஏனைய மனித குலமும் நானே" என்று நாம் சொல்வதே இல்லை. நீங்களே உலகத்தின் ஏனையோர். ஏனென்றால், உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு மனிதனும் தாங்கொணா துயரத்திலும், தாங்கொணா கவலையிலும், நிலையாமையிலும், குழப்பத்திலும், பாதுகாப்பில்லாமலும் உள்ளனர்.
 
உங்களைப் போலவே, உலகத்தின் ஏனையோர் துயரத்தை கடந்து செல்கின்றனர். நாம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. என் துன்பம் மற்றவர்களின் துன்பத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்று நாம் நினைக்கிறோம்.
 
நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு, மற்றவர் சொல்லத்தர வேண்டும் என்ற மனநிலையை நாம் கொண்டிருக்கிறோம்.
 
போப் ஆண்டவர் முதல், கடைநிலை பாதிரியார் வரை இவ்வாறே உள்ளனர்.
 
 
'''கடந்தகாலம்'''
 
காலமும் எண்ணமும் கடந்த காலத்தை முற்றுபெறச் செய்வதில்லை, காலமும் எண்ணமுமே கடந்தகாலம்தான்.
 
'''''வேலை'''''
வரி 262 ⟶ 309:
5th Talk in the Oak Grove, Ojai, California, 3rd May 1936
 
 
'''''ஈகை'''''
 
கேள்வி: சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு தொண்டு மற்றும் நன்கொடை செய்வதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
ஜே கிருஷ்ணமூர்த்தி: நலிவடைந்தவர்களிடம் இரக்கமின்றி பிடுங்கி அவர்களுக்கே மீண்டும் சிறிது கொடுப்பவர்தான் சமூக தொண்டுசெய்யும் கொடையாளர்.
 
முதலில் அவர்களை பயன்படுத்திக் கொள்வீர்கள். கணக்கில்லாத நேரம் அவர்களை வேலை வாங்கிக் கொள்வீர்கள்; ஏமாற்றி, தந்திரமாக பல பெரும் சொத்துக்களை குவிப்பீர்கள். பின்பு, தயாள குணத்துடன் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சிறிது கொடுப்பீர்கள். (கூட்டத்தில் சிரிப்பு)
 
நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இதையே நீங்களும் வேறு ரீதியில் செய்வதாக இருக்கலாம்.
 
நீங்கள் சாதுர்யமாக, தந்திரமாக அரக்ககுணத்துடன் பெரும் சொத்து குவிக்காமல், பெருங்கொடையாளர் ஆகாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கு, ஆன்மீக உயர் லட்சியத்தில், அறிவு என்று சொல்லப்படுவதை பெரும் திரளாக குவித்திருக்கலாம்.
 
கொடைகுணம் தன்னைத் தானே அறிந்துகொள்ளாது. முதலில் குவித்துவிட்டு பின்பு கொடுப்பதும் அல்ல அது.
 
அது மலரைப் போன்றது. அது இயற்கையாக, உடனடியாக, திறந்த மனதுடன் செய்வதாகும்.
 
Rio De janeiro, Brazil, 4th public talk, 10th May 1935.
 
 
'''''சுயமாக எதையுமே கண்டறிந்ததில்லை.'''''
 
நமது ஆசிரியர்களால், தலைவர்களால், நமது புத்தகங்களால், துறவிகளால் நாம், பல நூற்றாண்டுகளாக சிறுகச் சிறுகக் கூறிப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். மலைகளுக்கு, பூமிக்கு அப்பால் என்ன உள்ளது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்கிறோம். அவர்களுடைய விளக்கங்களால் நாம் திருப்தியடைந்துவிடுகிறோம்.
 
அதற்கு என்ன அர்த்தமெனில், நாம், அடுத்தவர்களுடைய சொற்களிலேயே வாழ்கிறோம், ஆகவே நமது வாழ்க்கை ஆழமற்றதாகவும், வெறுமையாகவும் உள்ளது. நாம் இரண்டாம் தர மனிதர்கள்.
 
நமக்கு சொல்லப்பட்ட வார்த்தைகளின்படி நாம் வாழ்கிறோம். அதாவது நமது மனம் யாருக்கு இணங்குகிறதோ அவர்களுடைய வழிகாட்டுதலின்படி அல்லது நம் சொந்த மனம் செல்லும் போக்கில் அல்லது சுற்றுப்புற சூழ்நிலையின் கட்டாயத்தின்படி வாழ்கிறோம். பல்வேறு வகையான தாக்கங்களின் விளைவே நாம்.
 
நம் உள்ளிலோ, புதியது எதுவும் இல்லை. சுயமாக எதையுமே கண்டறிந்ததில்லை. நம்மிடம் எதுவும் தூயதாக, மாசற்றதாக, அசலாகவே இல்லை.
 
– அறிந்ததலிருந்து விடுதலை
 
 
'''''நம்முள் உலகத்தின் தாக்கம்'''''
 
நான் உங்களை பயன்படுத்தி கொள்ளலாம். காரணம் நீங்களும் அதைத்தான் விரும்புகிறீர்கள். உங்களை ஒரு கருவியாக அடுத்தவர் பயன்படுத்திக்கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள்; சுயமாக சிந்திப்பதைவிட இது உங்களுக்கு மிகவும் எளிய வழியாக உள்ளது.
 
நீங்கள் அனைவரும் திணிப்பாளர்களால் இயந்திரம்போல, அதனின் பல்சக்கரம் போல ஆட்டுவிக்கப்படுகிறீர்கள் -- மதங்கள், உங்களை கடவுள் பெயரில் பயன்படுத்திக்கொள்கின்றன. அரசியல்வாதிகள், கல்வியாளர் மற்றும் சமுதாயம் உங்களை சட்டம் என்ற பெயரில் திணிக்கவும் உபயோகப்படுத்திக்கொள்ளவும் செய்கின்றன. தங்களை மதகுருவென்று கூறி கொள்வோர் உங்களை சடங்கு மற்றும் சம்பிரதாயம் என்ற பெயரிலும், இஷ்டதேவதை என்ற பெயரிலும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
 
நான் இந்த நிதர்சன உண்மைகளைப்பற்றி உங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே செய்கிறேன். இதை குறித்து நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்.
 
 
'''உயர்வு மனப்பான்மை'''
 
தாழ்வு மனப்பான்மை உள்ளவர், உயர்வு மனப்பான்மைக்காக ஏங்குபவர்கள் ஆவர்.
 
ஒருவர் உங்களை புகழ்ந்தாலோ இகழ்ந்தாலோ, உங்களுக்குள்ளிருக்கும் சேகரித்து வைத்துள்ள அந்த மையத்தின் மீது, தான் என்ற உணர்வு இல்லாமல், எவ்வித பெயரும் இடாமல் விழிப்புணர்வு கெள்ளமுடியுமா?
 
 
'''''மற்றவருடன் ஒப்பீடு'''''
 
குழந்தை பருவம், பள்ளிப்பருவம் முதல், இறக்கும் வரை, வாழ்க்கை முழுவதும் நம்மை மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்க நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்.
 
இன்னொருவருடன் ஒப்பிடுகையில் என்னை நானே அழித்துக்கொள்கிறேன்.
 
ஒரு பள்ளியில், நிறைய சிறுவர்கள் உள்ளனர், ஒருவனை மிகவும் புத்திசாலியான மாணவனுடன் ஒப்பிடுகையில், உண்மையில் அச்சிறுவனுக்கு என்ன நடக்கிறது? அவன் மந்தமாகிறான், நீங்கள் அச்சிறுவனை அழிக்கிறீர்கள். இதுதான் வாழ்க்கை முழுவதும் நடக்கிறது.
 
தனக்கு மேலேயும் கீழேயும் யாரும் இல்லை; தன்னைவிட உயர்ந்தவர் தாழ்வானவர் என யாரும் இல்லை எனும் போது, நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்; இந்த ஒப்பீட்டு செயல்முறை முடிவுக்கு வந்தால்தான் நீங்கள் யார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
 
நான் எப்போதும், சில மாகாத்மாக்கள் அல்லது அறிஞர், தொழிலதிபர், எழுத்தாளர், கவிஞர் என மற்றவருடன் என்னை ஒப்பிட்டால் எனக்கு என்ன நடக்கிறது? நான் ஏதோ ஒன்றை அடைய, இலாபம் பெற, மற்றொன்றாக மாறுவதற்காகவே ஒப்பீடு செய்கிறேன்.
 
ஆனால், என்னை புரிந்துகொண்டாலே நான் முன்னோக்கி செல்ல முடியும்.
 
மற்றவரோடு என்னை ஒப்பிடாதபோதுதான், நான் என்னவாக இருக்கிறேன் என்பதை புரிந்துகொள்ள தொடங்குகிறேன்.
 
தன்னை புரிந்துகொள்ள தொடங்குவது மிகவும் பேரார்வமுடையது, மிகவும் சுவாரஸ்யமானது; தன்னைப் பற்றிய புரிதலானது, இந்த அனைத்து முட்டாள்தனமான ஒப்பீடுதல்களுக்கும் அப்பால் நம்மை அழைத்து செல்கிறது.
 
Talks & Dialogues, Saanen (9 July1967)
 
 
'''''தனித்து நிற்பவனே கபடமற்றவன்.'''''
 
மனிதன், ஆழ்ந்து தனிமைப்பட்டு போதலே, அவனுடைய துயரங்களின் ஒரு காரணியாக இருக்கிறது. உங்களுக்கு தோழமை, கடவுள்கள், பேரளவு அறிவு ஆகியவை இருக்கலாம், நீங்கள் சமூக செயலில், சுறுசுறுப்பாக ஈடுபடலாம், அரசியலைப் பற்றி முடிவில்லாமல் பேசலாம் –பெரும்பாலான அரசியல்வாதிகள் பேசியே பொழுதை கழிப்பார்கள் என்பது வேறு விஷயம் – ஆனால், இந்த தனிமைப்படுத்தப்பட்டதோர் உணர்வு இருந்துகொண்டேயிருக்கிறது.
 
அதன் காரணமாக, மனிதன் வாழ்க்கைக்கு ஒரு முக்கியத்துவத்தை கண்டுபிடிக்கிறான். ஆனாலும், இந்த தனிமைப்படுத்தப்பட்டதோர் உணர்வு இருந்துகொண்டேதான் இருக்கிறது. இவ்வுணர்வை, எந்தவொரு ஒப்பீடு செய்யாமல், அதைவிட்டு ஓட முயற்சிக்காமல், அதை மூடிமறைக்க முயற்சி செய்யாமல் அல்லது அதிலிருந்து தப்பிக்க முயலாமல், அதை உள்ளது உள்ளபடி நீங்கள் பார்க்க முடியுமா? அப்போது அந்த தனிமைப்படுத்தபட்ட உணர்வு, முற்றிலும் வேறு கோணமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.
 
தனித்து நிற்பது என்பது வேறு, தனிமைப்படல் என்பது வேறு. நாம் தனித்து நிற்பதே இல்லை. ஆயிரக்கணக்கான தாக்கங்கள், உளவியல் மரபு, கலச்சாரம், பிராச்சாரங்கள் ஆகியவற்றின் விளைவுகளாக நாம் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான விஷயங்கள், நம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. நாம் தனித்து நிற்பதே இல்லை, நாம் இரண்டாம் தர மனிதர்களாகவே இருக்கிறோம்.
 
நாம் தனித்து நிற்கும்போது, நாம் குடும்பத்திலிருந்தபோதிலும், எந்தவொரு குடும்பத்தை சாராதவராக, எந்தவொரு தேசத்திற்கும் கலாச்சாரத்திற்கும் உட்படாமல், நம்மை குறிப்பிட்ட விஷயத்திற்கு அர்ப்பனித்து கொள்ளாமல் இருக்க முடியும்.
 
அப்போது, வெளிப்புறத்தே இருக்கும் நபர் போன்றதோர் உணர்வு வரும் – அனைத்து வித எண்ணங்கள், செயல், குடும்பம், நாடு முதலானவற்றிற்கு வெளிப்புறத்தே இருக்கும் நபர். இவற்றிலுருந்து முற்றிலும் தனியே வந்த அவனே, கபடமற்றவன்.
 
கபடமில்லா தன்மையால்தான் மனதை துயரத்திலிருந்து விடுவிக்க முடியும்.
 
The Book of Life, December 5.
 
 
'''''அமைதி பிறக்க, கடினமான வேலை'''''
 
அமைதி பிறக்க, கடினமான வேலை தேவைப்படுகிறது. அமைதியுடனான விளையாடல் கூடாது.
 
அமைதி, புத்தகங்களை வாசிப்பதன் மூலமோ, சொற்பொழிவை கேட்பதன் மூலமோ, கூட்டு அமர்தலின் மூலமோ, உலகை விட்டுச் சென்று மடாலயத்தில் தங்குவதின் மூலமோ அனுபவிக்கக்கூடியது அல்ல. இவையெல்லாம் அமைதியை கொண்டுவந்துவிடாது. அமைதி, தீவிர மனோதத்துவ வேலையை கோருகிறது.
 
"பிறரைவிட நானே சிறந்தவன்" என்கிற அந்த ‘மையத்தை’ கூர்மையாக விழிப்புகொள்ளவேண்டும் – உனது பயம், 'என்ன நடக்குமோ' என்ற கவலை, குற்ற உணர்வு ஆகிய எல்லாவற்றையும் விழிப்புகொள்ள வேண்டும். இவற்றை போக்குவதை குறித்துள்ள ஆழ்ந்த உத்வேகம் உள்ளபோது, அந்த உத்வேகத்திலிருந்து அமைதியின் அழகு பிறக்கிறது.
 
• 6th talk, London (17 June 1962), published in The Collected Works of J. Krishnamurti : Vol. XIII, 1962-1963: A Psychological Revolution (1992)
 
 
'''எளிமையுடன் செவிமடுத்தல்.'''
 
நீங்கள் எப்போதாவது மௌனமாக உட்கார்ந்திருக்கிறீர்களா? உங்கள் கவனத்தை குறிப்பிட்ட எதிலும் விடாப்பிடியாக செலுத்தாமல், ஒருமுகப்படுத்தும் முயற்சி எதுவும் செய்யாமல், மிகவும் இயல்பான அமைதியுடன் அமர்ந்திருக்கிறீர்களா?
 
இதுபோன்ற அமைதியில், உங்களால் எல்லாவற்றையும் கேட்கமுடியும் – வெகு தொலைவிலுள்ள சத்தத்தையும் கேட்க முடியும்; அருகிலுள்ள சத்தத்தையும் உங்களால் கேட்கமுடியும்; இரண்டையும் ஒருசேரவும் கேட்க முடியும். அதாவது, நீங்கள் இயல்பான அமைதியில், எல்லாவற்றையும் கேட்கமுடியும், கவனிக்க முடியும். உங்கள் மனதின் கவனம், ஒரு சிறிய அலைவரிசையோடு மட்டும் ஒட்டிக்கொள்வதில்லை.
 
இதுபோல, எளிதாக, கடினமில்லாமல் நீங்கள், அனைத்தையும் கேட்கத்தொடங்கினால், உங்களின் உள்ளில் அசாதாரண மாற்றம் அடைவதை காண்பீர்கள்.
 
உங்களின் வில்-பவர் இல்லாமல் வந்த மாற்றம் அது. நீங்கள் அடைய நினைத்து வந்ததல்ல அது.
 
அத்தகைய மாற்றத்தில், பேரழகும், ஆழ்ந்த உள்புரிதலும் இருக்கும்.
 
The Book of life, January 1, Listen with ease
 
 
வரி 280 ⟶ 438:
 
அப்போது, இந்த அனைத்தையும் உடைப்பதற்கான கடினம் இன்னும் கூடிக்கொண்டே போகிறது.
 
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
 
Jiddu Krishnamurti
 
From 'Life Ahead', chapter – 12
 
 
'''பிறர் அறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தியை பற்றி'''
 
கலீல் ஜிப்ரான்: "அவர் [கிருஷ்ணமூர்த்தி] என்னுடைய அறையில் நுழைந்தபோது, 'நிச்சயமாக அன்பின் திரு உருவமே வந்துவிட்டது' என்று என்னிடம் கூறிக்கொண்டேன்."
 
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கிருஷ்ணமூர்த்தியை "இவர் தனித்துவம் வாய்ந்த ஒரு மேன்மையான ஆன்மீக தன்மையுடையவர்" என்று அழைத்தார், மேலும் அவர், "நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அழகான மனிதர் இவர்." என்றார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜிட்டு_கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது