அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4,270 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
யாரன்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட
 
பேரன்பே இன்னும் பெருக்கு......................................31
 
 
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின்
 
ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின்
 
முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா
 
நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்..................................32
 
 
நூலறிவு பேசி நுழைவிலா தார் திரிக
 
நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்தது
 
எக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
 
அக்கோலத் தவ்வுருவே யாம்.....................................33
 
 
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே
 
நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு
 
ஒருகணையாற் செற்றானை உள்ளத்தா லுள்ளி
 
அருகணையா தாரை அடும்......................................34
 
 
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந்து
 
இடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள்
 
அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல
 
மணிமிடற்றின் உள்ள மறு.......................................35
 
 
மறுவுடைய கண்டத்தீர் வாரசடைமேல் நாகம்
 
தெறுமென்று தேய்ந்துழலும் ஆவா - உறுவான்
 
தாளரமீ தோடுமேல் தானதனை அஞ்சி
 
வளருமோ பிள்ளை மதி.........................................36
 
 
மதியா அடலவுணர் மாமதில்மூன் றட்ட
 
மதியார் வளர்சடையி னானை - மதியாலே
 
என்பாக்கை யாலிகழா தேத்ததுவரேல் இவ்வுலகில்
 
என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.................................37
 
 
ஈண்டொளி சேர்வானத் தெழுமதியை வாளரவம்
 
தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர்
 
தாரேறு பாம்புடையான் மார்பில் தழைத்திலங்கு
 
கூரேறு கானேனக் கொம்பு......................................38
 
 
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன்றன்
 
அம்பவள மேனி யதுமுன்னம் - செம்பொன்
 
அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி
 
மணிவரையே போலும் மறித்து...................................39
 
 
மறித்து மடநெஞ்சே வாயாலும் சொல்லிக்
 
குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர்
 
கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட்டு
 
உள்ளாதார் கூட்டம் ஒருவு......................................................40
 
 
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
 
ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்
 
நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால்
 
நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து...............................41
 
 
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/28040" இருந்து மீள்விக்கப்பட்டது