வாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
15ஆவது, 16ஆவது நூற்றாண்டுகளில் அத்திலாந்திக்குத் தீவுகளில் [[பிரேசில்]], மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் போர்த்துக்கேய குடியேற்றவாதிகள் வாழைத்தோட்டங்களை அமைக்கத் தொடங்கினர்.<ref name=Phora /> உள்நாட்டுப் போரை அடுத்து வட அமெரிக்காவில் மிக உயர்ந்த விலையில் சிறிய அளவில் வாழைப்பழங்களை நுகரத் தொடங்கினர்; 1880 களிலிருந்து அங்கு மிகப்பரவலாக நுகரப்பட்டது.<ref name=Koep08 /> ஐரோப்பாவில் [[விக்டோரியா காலம்]] வரை வாழை பரவலாக அறியப்படவில்லை.<ref name=Phora /> 1872ஆம் வெளியான ''அரௌண்டு தி வேர்ல்டு இன் 80 டேசு'' என்ற புதினத்தில் [[ழூல் வேர்ண்]] தனது வாசகர்களுக்கு வாழையைக் குறித்து விவரமாக எடுத்துரைத்துள்ளார்.
 
தற்கால வாழைத்தோட்டமுறை பயிரிடல் யமைக்காவிலும் மேற்கு கரீபிய வலயத்திலும் தொடங்கியது; இது பெரும்பாலான [[நடு அமெரிக்கா]]விற்கும் பரவியது. நீராவிக் கப்பல்களும் தொடர்வண்டித் தடங்களும் போக்குவரத்து வசதியைத் தந்திட, குளிர்பதனத் தொழினுட்பம் அறுவடைக்கும் பழுத்தலுக்கும் இடையே உள்ள காலத்தை நீட்டிக்க உதவிட வாழை வேளாண்மை வளர்ச்சியடைந்தது. ''சிக்குயிட்டா பிராண்ட்சு இன்டர்னேசனல்'', ''டோல்'' போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கின.<ref name=Koep08 /> இந்த நிறுவனங்கள் பயிரிடல், செய்முறைகள், போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் என்ற அனைத்தையும் தாமே செய்யத்துவங்கின. இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகளை பயன்படுத்தி (தன்னிறைவு பெற்று, வரி விலக்குகள் பெற்று, ஏற்றுமதி செய்யும், அந்நாட்டு பொருளாதாரத்தில் எவ்வகையிலும் பங்கேற்காத) ''அடிமைப்பட்ட பொருளாதாரத்தை'' நிறுவின. இதனால் இவ்வகைப் பொருளாதாரங்களுள்ள நாடுகள் [[பனானா குடியரசுகள்]] (Banana republic) எனக் குறிப்பிடப்படலாயின.<ref name=NZH />
 
== வாழையின் உறுப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது