செவ்வாய் (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 97:
 
செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் [[நீர்மம்|நீர்ம]] நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. [[நிலத்தடி நீத்தேக்கம்|நிலத்தடி நீத்தேக்கங்களில்]] இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது [[எரிமலைக் குழம்பு]]களினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய காய்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
 
செவ்வாய் கோளின் நிலத்தடியில் பனிக்கட்டிக்குள் மறைந்திருக்கும், 12 மைல் அகலமுள்ள நீர்த்தேக்கம் உள்ளதாக விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். <ref>{{Cite web|url=https://www.neotamil.com/science/space/water-found-in-mars-reservoir-underground-habitable-life-radar/|title=செவ்வாய் கோளில் தண்ணீர் கண்டுபிடிப்பு|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீர் உள்ளது என Mars Express High Resolution Stereo Camera மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/science/space/mars-ice-crater-marsquakes-snow-red-planet-korolev-crater-sergei-korolev/|title=செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
<br />
 
== செவ்வாயின் தட்பவெப்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/செவ்வாய்_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது