அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''காரைக்கால் அம்மையார்''' எழுதிய

==அற்புதத் திருவந்தாதி'''==
 
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
வரி 550 ⟶ 552:
 
எவ்வுருவோ நின்னுருவம் ஏது..................................61
 
 
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகாது
 
ஈதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால்
 
வில்வேட னாகி விசயனோடு ஏற்றநாள்
 
வல்வேட னான வடிவு........................................62
 
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே
 
நெடிதுவலி நின்றெரிக்குங் கொல்லோ - கடியுலவு
 
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
 
நின்முடிமேல் திங்கள் நிலா ...................................63
 
 
நிலாவிலங்கு பொன்மதியை நேடிக்கொள் வான்போல்
 
உலாவி உழிதருமா கொல்லோ - நிலாவிருந்த
 
செக்கரவ் வானமே யொக்குந் திருவடிக்கே
 
புக்கரவங் காலையே போன்று..................................64
 
 
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
 
வேலையே போன்றலங்கும் வெண்ணீறு - மாலையின்
 
தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு
 
வீங்கிருளே போலும் மிடறு....................................65
 
 
 
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி
 
மிடற்றில விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து
 
மைத்தாம் இருள்போலும் வண்ணங்கரிதாலோ
 
பைத்தாடு நும்மார்பிற் பாம்பு...................................66
 
 
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியும்
 
தாம்பயின்று தாழருவி தூஙஅகுதலால் - ஆம்பொன்
 
உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத்
 
திருவடியின் மேய சிலம்பு.....................................67
 
 
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் போல
 
சிலம்படிமேற் சொவ்வரத்தம் சேர்த்தி நலம்பெற்று
 
எதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான்
 
முதிரா மதியான் முடி........................................68
 
 
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல
 
அடிமேற் கொடுமதியோம் கூற்றைப் படிமேல்
 
குனியவல மாமடிமை கொண்டாடப் பெற்றோம்
 
இனியவலம் உண்டோ எமக்கு.................................69
 
 
எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிராது
 
எமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே
 
போந்தெரி பாய்ந்தன்ன புரிசடையாய் பொங்கிரவில்
 
ஏந்தெரி பாய்ந்தாடும் இடம்....................................70
 
 
இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
 
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
 
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலம்காண்
 
கண்டாயே முக்கண்ணாய் கண்.................................71
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/அற்புதத்_திருவந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது