பாறைவேதிப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
ஒரு [[பாறைநெய் தூய்விப்பாலை|பாறைநெய் தூய்விப்பாலையில்]] பாறைநெய்யைத் தூய்விப்பதன் வழியாக உருவாக்கப்படும் வேதிப்பொருள்கள் '''பாறைவேதிப்பொருள்கள்''' என்று வழங்கப்படுகின்றன. பிற [[புதைபடிவ எரிபொருள்]]களான [[நிலக்கரி]], [[இயற்கை எரிவளி]] போன்றவற்றில் இருந்தும் வருவிக்கப்படும் சில வேதிப்பொருள்களும் பாறைவேதிப்பொருள்களுள் அடங்கும். சோளம், கரும்பு, பனம்பழம் போன்ற புதுப்பிக்கத் தக்க வளங்களில் இருந்தும் பாறைவேதிப்பொருள்கள் தயாரிக்கலாம்.
 
பாறைவேதிப்பொருள்களில் பரவலாய் அறியப்பட்ட இரண்டு பிரிவுகள்: 1) [[எத்திலீன்]], [[புரொப்புலீன்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[ஆல்க்கீன்|ஒலிபீன்கள்]], 2) [[பென்சீன்]], [[தொலுவீன்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[அரோமேட்டிக்கு|அரோமேட்டிக்குகள்]] ஆகியனவாம்.
வரிசை 19:
உலக அளவில் எத்திலீன் 115 மில்லியன் டன்களும், புரொப்பிலீன் 70 மில்லியன் டன்களும் ஆண்டொன்றுக்குத் தயாரிக்கப்படுகின்றன. அரோமேட்டிக்குகளும் 70 மில்லியன் டன் அளவிற்குத் தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் மேற்கு ஐரோப்பாவிலும் இப்பாறைவேதிப்பொருள்களைத் தயாரிக்கும் பெரும் வேதிப்பொருள் ஆலைகள் அமைந்திருக்கின்றன. இருப்பினும், அண்மைய காலத்தின் மிகையான வளர்ச்சி என்பது மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியாவிலும் அமைந்திருக்கிறது. அதோடு, பாறைவேதிப்பொருள்களுக்கான வாணிகமும் பல நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது.
 
பாறைவேதிப்பொருள்கள் உலகில் சில ஆலைப்பகுதிகளிலேயே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன. காட்டாக, சவுதி அரேபியாவின் சுபைல், யான்பு தொழில்சார் நகரங்கள், அமெரிக்காவின் தெக்சாசு, உலூசியானா மாநிலங்கள், தீசைடு என்னும் இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதி, நெதர்லாந்தின் இராட்டர்டாம் நகர், இந்தியாவின் குசராத் மாநிலத்தின் சாம்நகர், தாகேசு பகுதிகள், மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களிலே இவை பெரும்பகுதி தயாராகின்றன.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பாறைவேதிப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது