தொண்டை மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எல்லைகள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தொண்டை நாடு''' அல்லது '''தொண்டை மண்டலம்''' என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. [[தொண்டைமான் இளந்திரையன்]] இந்நாட்டின் சங்ககால அரசன். பிற்காலச் சோழர்கள் தொண்டை நாட்டைக் கைப்பற்றியபிறகு அதற்கு '''ஜயங்கொண்ட சோழமண்டலம்''' என்று பெயர் சூட்டப்பட்டது. தொண்டை மண்டலம் குறித்து [[தொண்டைமண்டல சதகம்]] என்ற நூலானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[படிக்காசுப் புலவர்|படிக்காசுப் புலவரால்]] இயற்றப்பட்டது.
 
'''எல்லைகள் :-'''
இவை வடக்கோட்டு தமிழகத்தையும் தெற்கு ஆந்திரத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.
 
வடக்கில் [[வேங்கடம்]], தெற்கில் [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணைஆறு]], மேற்கில் [[பவளமலை]], கிழக்கில் [[வங்காள விரிகுடா|வங்கக்கடல்]] ஆகியவை இதன் எல்லைகள்.
 
இது இன்றைய ஆந்திரமாநிலத்தின் [[சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்|நெல்லூர்]], [[சித்தூர் மாவட்டம்|சித்தூர்]] மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் இன்றைய தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]], [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர்]] [[இராணிப்பேட்டை மாவட்டம்|இராணிப்பேட்டை]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] , [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]],[[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு]], [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] மற்றும் தமிழகத்தின் தலைநகரான [[சென்னை மாவட்டம்|சென்னை]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
 
'''குறிப்புகள் :-'''
 
தொண்டை நாடு, [[4ம் நூற்றாண்டு|நான்காம்]] நூற்றாண்டிலிருந்து [[9ம் நூற்றாண்டு|ஒன்பதாம் நூற்றாண்டு]] வரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் [[பல்லவர்]]களின் தாய்நாடாகும். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு 'திரையன்' என்னும் மன்னனும், தொண்டை நாட்டை காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 'இளந்திரையன்' என்னும் மன்னனும் சங்ககாலத்தில் ஆண்டுவந்தனர் என்றும், வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.<ref>தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் ஒரு விளக்கம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/தொண்டை_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது