ஐந்நூற்றுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎வீர வளஞ்சியர்: விபரம் சேர்ப்பது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
===வீர வளஞ்சியர்===
ஐந்நூற்றுவர் கழக வணிகர்கள் கன்னடத்தில் வீர பலஞ்சா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் தெலுங்கில் வீர கவரை என்றும் "தீரமிக்க வணிகர்கள்" என்ற பொருளில் அழைக்கப்பட்டனர்.<ref>''Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh'', Volume 100, by SS Shashi, p.86</ref> வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட இவ்வணிகர்களைப் பற்றி நடுக்கால [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரத்துக்]] கல்வெட்டுக்கள் பலவும் குறித்துரைக்கின்றன.<ref>''Studies in economic and social conditions of medieval Andhra'', by K.Sundaram, p.69-76</ref> வீர வளஞ்சியர் பற்றிக் காணப்படும் கல்வெட்டுக்கள் நிறையவே உள்ளன. எடுத்துக் காட்டாக, ஆந்திராவின் [[கடப்பா]] மாவட்டத்தில் உள்ள அனிலமை எனும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1531 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று அக்கிராமத்திலிருந்த சங்கமேசுவரர் கோயிலுக்கு ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் [[வளஞ்சியர்|வீர வளஞ்சியர்களால்]] கொடையளிக்கப்பட்ட விளக்கின் காரணமாகப் பருத்தி, நூல், துணிமணிகள் போன்ற வணிகப் பொருட்களுக்கான தீர்வை நீக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது.<ref>''Hindu and Muslim religious institutions, Andhra Desa, 1300-1600'', by Ravula Soma Reddy, p.110</ref>
 
ஐந்நூற்றுவர் அல்லது ''ஐயவோலா-எனும்பாரு-சுவாமிகளு'' எனப்பட்டோர் வீர வளஞ்சிய தருமத்தின் காவலர்களாகவும் வீர வளஞ்சிய சமயத்தைப் பின்பற்றுவோராகவும் இருந்தனரென்று [[நெல்லூர்]]ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.<ref>''The quarterly journal of the Mythic society (Bangalore)'', Volume 82, p.88-91</ref> [[குண்டூர்]] மாவட்டத்தின் சிந்தப்பள்ளியில் காணப்பட்ட பொ.கா. 1240 ஐச் சேர்ந்த கல்வெட்டொன்று வீர வளஞ்சிய சமயத்தில் (வணிகக் கழகத்தில்) உபயநானாதேசிகளும் கவரர்களும் மும்முறி தண்டர்களும் இருந்ததாகவும் ஐந்நூறு வீரர்களைத் தம்முடன் வைத்திருக்கும் உரித்துடையோராக இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.<ref>''A study of the history and culture of the Andhras'', Volume 2, by Kambhampati Satyanarayana, p.52</ref> இவர்களில் உபயநானாதேசிகள் எனப்படுவோர் பல்வேறு பகுதிகளையும் நாடுகளையும் சேர்ந்த தேசிகளும் பரதேசிகளும் நானாதேசிகளுமாக இருந்த அதே வேளை, கவரர்கள் எனப்படுவோர் கவரேசுவரர் எனப்பட்ட கடவுளை வழிபடும் வணிகர்களாக இருந்தனர்.
 
நகரேசுவரரை வழிபட்ட வைசியர்களைக் கொண்ட நகரத்தார் சமூகத்தையும் (''சிறீ கவரேசுவர திவ்ய தேவ சிறீபாத பதுமராதக் குழு'') எனப்பட்ட கவரேசுவரரை வழிபட்ட [[பலிஜா|வளஞ்சியர்]] சமூகத்தின் கவரர்களையும் போலச் சில வணிகக் கழகங்கள் சமய அடையாளங்களின் அடிப்படையில் அமையப் பெற்றிருந்தன.<ref>''Cultural heritage of the Kakatiyas: a medieval kingdom of south India'', by S.Nagabhushan Rao, p.59</ref> மும்முறி தண்டர்கள் எனப்படுவோர் முதலில் போர் வீரர்களாயிருந்து பின்னர் வணிகர்களாக மாறியோராவர். [[பெல்லாரி]] மாவட்டத்தின் குருகோடு என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொ.கா. 1177 ஆம் ஆண்டின் கல்வெட்டொன்று மும்முறி தண்டர் எனப்படுவோர் ஆரியபுரம் அல்லது ஐகோலே என்ற நகரின் ஐந்நூற்றுவர் வணிகக் கழகத்தின் ஒரு பிரிவினரெனக் குறிப்பிடுகிறது.<ref>''Brahma sri: Researches in archaeology, history, and culture in the new millennium'' : Dr. P.V. Parabrahma Sastry felicitation volume, Volume 1, p.169</ref> போர்களும் படையெடுப்புக்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வீர வளஞ்சிய சமயம் போன்ற வணிகக் கழகங்கள் பல்வேறு பேரரசுகளின் கீழும் வள மிக்கனவாகவே திகழ்ந்தன.<ref>''A study of the history and culture of the Andhras'', Volume 2, by Kambhampati Satyanarayana, p.125</ref>
 
==தொடர்புடைய தமிழ் ஆவணங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்நூற்றுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது