மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்பு (1303): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 38:
 
இத்தகைய கடினமான சூழ்நிலைகள் காரணமாக மங்கோலியர்களுடன் நேரடியான சண்டை ஏற்படுவதை தவிர்க்க அலாவுதீன் முடிவெடுத்தார். மதில் சுவர்கள் கொண்ட தில்லி நகரத்தில் இருந்து வெளியேறி அலாவுதீன் தனது அரசவை முகாமை அப்போது கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிரி கோட்டையில் அமைத்தார்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=369}} சிரி கோட்டையானது மூன்று பக்கங்களிலும் யமுனை ஆறு, அடர்ந்த காடு மற்றும் தில்லியின் பழையகோட்டை ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது. சிரி கோட்டையின் வடக்குப் பகுதி மட்டுமே பாதுகாப்பின்றி இருந்தது.{{sfn|Kishori Saran Lal|1950|p=164}} தனது சிரி முகாமைச் சுற்றி ஒரு அகழி வெட்ட அலாவுதீன் ஆணையிட்டார். அந்த அகழியானது தில்லியில் இருந்த வீடுகளின் கதவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட மரத்தாலான பாதுகாப்பு அரண்களால் காக்கப்பட்டது. இந்த தற்காலிக குடியிருப்பானது ராணுவ வீரர்களைக் கொண்ட பல்வேறு பிரிவுகளால் பாதுகாக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் அதன் முன் பகுதியில் 5 முழுவதும் ஆயுதம் தாங்கப்பட்ட யானைகளை கொண்டிருந்தது.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=369}}
 
== தில்லி மீது மங்கோலிய படையெடுப்பு ==
 
மங்கோலியர்கள் தில்லி ராணுவத்தின் முன்வரிசை படையை இரண்டு அல்லது மூன்றுமுறை சந்தித்தனர். இந்த சண்டைகள் இருபுறத்திற்கும் தீர்க்கமான வெற்றியின்றி முடிந்தன. மங்கோலியர்களால் அலாவுதீனின் சிரி முகாமுக்குள் நுழைய முடியவில்லை.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=369}}
 
சிரியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதிலும் மங்கோலியர்கள் தற்கால தில்லியின் பிற பகுதிகளுக்குள் முன்னேறினர். வரலாற்றாளர் பரணி இந்தப் பகுதிகளை சவுதரா-இ-சுபானி, மோரி, ஹுதுதி மற்றும் அரச தொட்டி (''ஹவுஸ்-இ-சுல்தானி'') என்று பெயரிடுகிறார். எனினும் இப்பெயர்கள் நவீனகால இடங்களுடன் பொருந்தவில்லை. ''ஹவுஸ்-இ-சுல்தானி'' என்ற இடம் ஒருவேளை தற்போதைய ஹவுஸ்-இ-சம்சி என்ற இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அரசாங்கத்துக்குச் சொந்தமான கடைகளை மங்கோலியர்கள் சூறையாடினர். சோளம் மற்றும் பிற பொருட்களை அங்கிருந்து எடுத்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்றனர்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=369}}
 
மங்கோலியர்கள் தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு இருந்தனர். ஆனால் அலாவுதீனின் சிரி முகாமுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை. ஒரு எதிரி பகுதிக்குள் மேலும் சில காலத்திற்கு இருப்பது என்பது தன்னுடைய ராணுவத்திற்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்பதை தரகை உணர்ந்தார். எனவே அந்நேரம் வரை சூறையாடிய பொருட்களை எடுத்துக் கொண்டு திரும்புவது என முடிவெடுத்தார்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=370}} துவா மற்றும் சபர் இடையில் தரகையின் தாயகத்தில் நடைபெற்ற சண்டையும் தரகை திரும்புவதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.{{sfn|Peter Jackson|2003|pp=223-224}} ஆனால் பிற்கால புனைகதைகளில் சுபி துறவியான நிஜாமுதீன் அவுலியாவின் பிரார்த்தனை தான் தரகையை பின்வாங்க வைத்தது என்று கூறப்பட்டது.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=370}}
 
அந்நேரத்தில் தில்லியில் வாழ்ந்த வரலாற்று ஆய்வாளரான ஜியாவுதீன் பரணி பிற்காலத்தில் எழுதியதன் படி தில்லி நகரமானது எக்காலத்திலும் அதுபோன்ற ஒரு மங்கோலிய பயத்தில் இருந்ததில்லை. அவரது கூற்றுப்படி தரகை மேலும் ஒரு மாதத்திற்கு தில்லியில் தங்கியிருந்திருந்தால் தில்லி நகரமானது தரகையிடம் வீழ்ந்திருக்கும்.{{sfn|Banarsi Prasad Saksena|1992|p=369}}
 
== உசாத்துணை ==