முதலாம் இராஜராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 18:
{{சோழர் வரலாறு}}
 
'''அருள்மொழிவர்மன்''' என்கின்ற பேரரசர் ''இராசகேசரி வர்மன்'' '''முதலாம் இராசராச சோழன்''' [[சோழர்|சோழ பேரரசின்]] புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார்.
[[தென்னிந்தியா]] மற்றும் [[தமிழ்நாடு|தமிழகத்தை]] ஆண்ட எந்த ஒரு மன்னனுக்கு இல்லாத தனி சிறப்பு ''இராசகேசரி வர்மன்'' [[முதலாம் இராசராச சோழன்|முதலாம் இராசராச சோழனுக்கு]] உள்ளது. தென்னிந்தியாவையும், தமிழத்தையும் சிறும், சிறப்புமாக முதலாம் இராசராச சோழனால் ஆட்சி செய்தார். மக்களுக்கு தேவைப்பட்ட பல நன்மைகளை செய்தார் அதுமட்டுமின்றி நிதி, நீதி, நீர் மேளான்மை, வரி அனைத்தையும் சிறந்த முறையில் அமைத்தார். ''சோழ மரபினரின் பொற்காலம்'' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராசேந்திரன்]] காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, [[சோழர் படை|இராணுவம்]], [[சோழர் கலை|நுண்கலை]], கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
 
இவர் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட [[சுந்தர சோழன்|சுந்தர சோழ]]னுடைய இரண்டாவது மகனாவார். [[சுந்தர சோழன்|சுந்தர சோழனுக்கும்]] சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால [[உத்தம சோழன்|உத்தம சோழ]]னின் ஆட்சிக்குப் பின்னரே இவர் க்ஷத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன்(க்ஷத்திரிய சிகாமணி) என்று புனைப்பெயர் கொண்டு வாழ்ந்தார். [[விசயாலய சோழன்]] நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் [[தென்னிந்தியா|தென்னிந்திய]] வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_இராஜராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது