ஐன் ஜலுட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
==மரபு==
{{Original research section|date=May 2020}}
பல்வேறு மொழிகளில் உள்ள ஏராளமான ஆதாரங்கள், மங்கோலிய வரலாற்றாளர்கள் பொதுவாகப் பேரரசின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே காணச் செய்தன. அப்பார்வையின் படி, ஐன் ஜலுட் யுத்தமானது ஏராளமான கல்வி சார்ந்த ஆராய்ச்சிகளின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பிரபலமான வரலாற்றாளர்கள் மங்கோலியர்களின் முன்னேற்றமானது நிரந்தரமாக நிறுத்தப்பட்ட முதல் நிகழ்வை கொண்ட ஒரு சகாப்த யுத்தம் என்று இந்த யுத்தத்தைக் கருதினர். மேலும் மங்கோலியர்களின் முதல் தோல்வி என்று கூட கருதினர்.<ref name="Tschanz">{{Cite web |last=Tschanz |first=David W. |date= |title=Saudi Aramco World : History's Hinge: 'Ain Jalut |url=http://www.saudiaramcoworld.com/issue/2007/history.s.hinge.ain.jalut.htm}} {{dead link|date=June 2019 |bot=InternetArchiveBot |fix-attempted=yes}}</ref><ref>Jack Weatherford, Genghis Khan and the Making of the Modern World.</ref> மங்கோலிய படையெடுப்புகளை மொத்தமாகப் பார்க்கும்போது, சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி, ஐன் ஜலுட் யுத்தம் அவர்களது முதல் தோல்வி கிடையாது அல்லது ஆரம்ப கால வரலாறுகளில் எழுதப்பட்டது போல மிக முக்கியமான யுத்தமும் கிடையாது.
 
ஐன் ஜலுட் யுத்தத்திற்கு முன்னர், மங்கோலிய ஒருங்கிணைப்புப் போர்களின் போது, சமுக்கா மற்றும் கெரயிடுகளிடம் தெமுசினின் தோல்விகளைத் தவிர்த்தாலும் கூட, மங்கோலியர்கள் பலமுறை தோற்கடிக்கப்பட்டு உள்ளனர். 1215 மற்றும் 1217 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மங்கோலியத் தளபதி போரோகுல், சைபீரிய துமத் பழங்குடியினரால் பதுங்கியிருந்து தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இதன் காரணமாகச் செங்கிஸ் கான் தோர்பேய் தோக்சினை அனுப்பினார். அவர் உத்திகள் மூலம் பழங்குடியினத்தை வென்றார்.<ref>Timothy May, The Mongol Empire: A Historical Encyclopedia, 203-4.</ref> 1221 ஆம் ஆண்டு மங்கோலியர்கள் [[குவாரசமிய அரசமரபு|குவாரசமிய அரசமரபை]] வெற்றிகொண்டதன் ஒரு பகுதியான [[பர்வான் யுத்தம்|பர்வான் யுத்தத்தின்]] போது சிகி குதுகு, சலால் அல்-தினால் தோற்கடிக்கப்பட்டார். இதன் விளைவாகச் செங்கிஸ் கான் தானே படைகளுடன் சுல்தான் சலால் அல்-தினை யுத்தம் செய்து [[சிந்து ஆற்றுப் போர்|சிந்து ஆற்றுப் போரில்]] தோற்கடிக்க வேண்டி வந்தது. [[ஒகோடி கான்|ஒகோடி கானின்]] ஆரம்ப கால ஆட்சியின் போது அவரது தளபதி தோல்கோல்கு, சின் தளபதிகள் வன் என்-யி மற்றும் புவாவால் கடுமையாகத் தோற்கடிக்கப்பட்டார். இதற்குப் பதிலளிக்க, ஒகோடி பிரபலமான [[சுபுதை|சுபுதையை]] அனுப்பினார். கடுமையான எதிர்ப்பை சந்தித்த பிறகு, மங்கோலியர்கள் தங்களது முழு இராணுவத்தையும் கொண்டுவந்து சின் பேரரசை தனித்தனியாக ஒகோடி, டொலுய் மற்றும் சுபுதை தலைமையிலான இராணுவங்கள் மூலம் சுற்றி வளைத்தனர்.<ref>Christopher P. Atwood, Pu'a's Boast and Doqolqu's Death: Historiography of a Hidden Scandal in the Mongol Conquest of the Jin.</ref> இறுதியாகச் சின் இராணுவங்கள் தோற்கடிக்கப்பட்டன. 1233 இல் சுபுதை [[கைஃபெங்|கைபெங்கைக்]] கைப்பற்றினார். சின் அரசமரபும் திறம்பட அழிக்கப்பட்டது.
 
ஐன் ஜலுட் யுத்தமானது மங்கோலிய விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை அல்லது அவர்களது படையெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 1299 ஆம் ஆண்டு கசன் கான் தலைமையிலான [[ஈல்கானரசு]] இராணுவமானது மம்லூக்குகளை வாடி அல்-கசந்தர் யுத்ததில் தீர்க்கமாகத் தோற்கடித்தது. திமிஷ்குவைக் கைப்பற்றியது. காசா வரை சென்றது. ஆனால் குதிரைகளுக்கு மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலை மற்றும் அந்நேரத்தில் [[சகதாயி கானரசு|சகதாயி கானரசுடன்]] நடந்துகொண்டிருந்த போர் ஆகியவைக் கசனைத் தனது இராணுவத்தை வட கிழக்கு ஈரானுக்கு அழைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது. இந்தப் படையெடுப்பு முடிந்தபிறகு கசன் மற்றொரு சிறிய படையைச் சிரியாவுக்கு அனுப்பினார். ஆனால் அப்படை இந்த யுத்தத்தை விட முக்கியமான யுத்தமான மர்ஜ் அல்-சபர் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டது. அந்த யுத்தமே மங்கோலிய விரிவாக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக அமைந்தது. சகதை வழித்தோன்றல்களுக்கு எதிரான போர் மற்றும் கசனின் மோசமாகிக் கொண்டிருந்த உடல்நலம் ஆகியவை அவரைப் பதில் தாக்குதல் நடத்த இயலாமல் செய்தன. 1305 ஆம் ஆண்டு கசன் இறந்தார்
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ஐன்_ஜலுட்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது