செங்கிஸ் கானின் வளர்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
போடோன்சாரின் நான்காம் தலைமுறை வழித்தோன்றலான கய்டு 11 ஆம் நூற்றாண்டின் போது பிறந்தார். "அனைத்து மங்கோலியர்களையும் ஆண்ட" முதல் [[ககான்]] கய்டு தான்.{{sfn|Twitchett|1994|p=331}} அவரது பேரன் [[காபூல் கான்]] [[சின் வம்சம் (1115–1234)|சின் அவைக்கு]] ஒரு தடவை அழைக்கப்பட்டார். போதை தலைக்கேறிய காபூல் கான் சின் பேரரசரின் தாடியைப் பிடித்து இழுத்தார். சின் பேரரசர் முதலில் காபூல் கானுக்குத் தண்டனை வழங்காமல் விட்டுவிடலாம் என முடிவு செய்தார். ஆனால் பிறகு மன மாற்றம் காரணமாக காபூல் கானைக் கைது செய்யத் தனது அதிகாரிகளிடம் ஆணையிட்டார். துரத்தி வந்த சின் வீரர்கள், பதுங்கியிருந்து தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறிது காலத்திற்குப் பிறகு கய்டுவும் இறந்துவிட்டார். இதன் காரணமாகப் பழிவாங்கும் வாய்ப்பைச் சின் அரசமரபினர் இழந்தனர். 1135 முதல் 1147 ஆம் ஆண்டுவரை மங்கோலியர்கள் தொடர்ந்து சின் எல்லைகளின் மீது திடீர்ச் சோதனைத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாகச் சின் அரசமரபினர் [[தாதர்கள்|தாதர்களுடன்]] கூட்டு வைத்தனர். தாதர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்து புதிய மங்கோலியக் கானான [[தாய்சியுடு]] இனத்தைச் சேர்ந்த [[அம்பகை|அம்பகையைப்]] பிடித்தனர். அவரை சின் அவையில் ஒப்படைத்தனர். தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அம்பகை ஒரு தூதுவனைத் தன் உறவினர்களிடம் அனுப்பினார். தன் உறவினர்கள் இறக்கும்வரை தாதர்களுடன் போரிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.{{sfn|May|2018|p=41}} ஒரு மரப்பலகையில் அம்பகையை வைத்து ஆணி அடித்தனர். அவர் இறக்கும் வரை அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். அம்பகை பிடிக்கப்பட்ட 1150கள் அல்லது 1160களில், காபூலின் பேரன் [[எசுகெய்]], [[மெர்கிடு]] இனத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து [[கொங்கிராடு]] இனத்தைச் சேர்ந்த அவரது மணப்பெண்ணை அபகரித்தார். தாதர்களுக்கு எதிராக [[ஹோடுலா கான்]] நடத்திய தொடர் சோதனைத் தாக்குதல்களின்போது எசுகெய் அதில் பங்கெடுத்தார். இத்தகைய தாக்குதல்களில், ஒரு தாக்குதலின்போது வீடு திரும்புகையில் அவரது மனைவி தெமுசின் என்ற மகனைப் பெற்றெடுத்தார். இந்தத் தெமுசின் தான் பிற்காலத்தில் செங்கிஸ்கான் ஆனார்.{{sfn|Twitchett|1994|p=333}}
 
==குழந்தைப் பருவம் (1162-1177)==
செங்கிஸ் கான், தெமுசின் என்ற பெயருடன் 1162 ஆம் ஆண்டு [[போர்சிசின்]] பழங்குடியினப் பிரிவின் தலைவரான எசுகெய்க்கும், அவருடைய மனைவியான [[ஒலகோனுடு]] பழங்குடியினத்தைச் சேர்ந்த [[ஓவலுன்|ஓவலுனுக்கும்]] மகனாகப் பிறந்தார். 1171 ஆம் ஆண்டு எசுகெய், தாதர் பகுதிகளின் வழியே தெமுசினைக் கிழக்கு நோக்கி, கொங்கிராடு பழங்குடியினத்தைச் சந்திப்பதற்காக அழைத்துச் சென்றார். கொங்கிராடு இனத்தவர்கள் எசுகெயின் மனைவியின் இனமாகிய ஒலகோனுடுவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர். அங்கு தனது மகனுக்கும், [[போர்த்|போர்ட்டே]] என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்ய அழைத்துச் சென்றார். எசுகெய் கொங்கிராடு இனத்துடன் தெமுசினைத் தங்க வைத்துவிட்டுத் திரும்பினார். எனினும் திரும்பும்போது தாதர்கள் அவரை உணவு உண்ண வருமாறு அழைத்து விஷம் வைத்துக் கொன்றனர். தெமுசின் தனது தந்தையைப் பார்க்கத் திரும்பினார். ஆனால் அவர் வரும் முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். தெமுசினின் தந்தையைப் பின்பற்றியவர்கள் ஓவலுனையும் அவரது குழந்தைகளையும் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விட்டனர். தனது குழந்தைகளை தனியாளாகக் காப்பாற்றும் நிலைக்கு ஓவலுன் தள்ளப்பட்டார்.{{sfn|Mote|2003|p=415-416}} ஓவலுன் தனது குழந்தைகளைக் [[கென்டீ மலைகள்|கென்டீ மலைகளுக்கு]] அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் மீன்களைப் பிடித்து மற்றும் கிழங்குகளை உண்டு பல ஆண்டுகளுக்குக் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தனர்.{{sfn|Mote|2003|p=419}} இந்த ஆண்டுகளில் தெமுசினின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி 3 நிகழ்வுகள் தவிர மிகக் குறைவாகவே தெரிய வருகிறது. தனது தந்தையின் முதல் தார மனைவி சோச்சிகலின் மகனாகிய பெக்தரைத் தெமுசின் மீனைத் திருடியதற்காகக் கொன்றார். இதன் காரணமாகத் [[தாய்சியுடு]] இனத்தவர்களால் பிடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார். குற்றவாளிகளுக்கு தண்டனைக்காகக் கழுத்தில் மாட்டப்படும் பலகையுடன் வாழ்ந்தார். பிறகு சோர்கன் சீரா என்ற இரக்க குணமுடைய ஒரு காவலாளியின் உதவியால் தப்பித்தார்.{{sfn|Twitchett|1994|p=335}} 1173 ஆம் ஆண்டு சதரன் (சசிரட்) இனத்தைச் சேர்ந்த [[சமுக்கா|சமுக்காவின்]] இரத்த சகோதரன் (''ஆன்டா'') ஆனார். சதரன் இனக் குழுவினர் போர்சிசின் இனக் குழுவில் இருந்து தான் தோன்றியவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் வேறு சிலர் அவர்கள் நெறிதவறிப் பிறந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.{{sfn|Atwood|2004|p=259}}
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/செங்கிஸ்_கானின்_வளர்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது