செங்கிஸ் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 379:
| align = right
| width = 25em
}}<ref>{{cite web|accessdate=செப்டம்பர் 15, 2018 |url=https://www.forbes.com/sites/ryanholiday/2012/05/07/9-lessons-on-leadership-from-genghis-khan-yes-genghis-khan/amp/ |title=செங்கிஸ் கானிடம் இருந்து 9 தலைமைப்பண்புப் பாடங்கள் |publisher=ஃபோர்ப்ஸ்|deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20160504082825/https://www.forbes.com/sites/ryanholiday/2012/05/07/9-lessons-on-leadership-from-genghis-khan-yes-genghis-khan/amp/ |archivedate=மே 04, 2016 |df=mdy }}</ref> ஒருவேளை உணவுக்கு வழியற்ற, ஆதரவற்று பனிப்பிரதேசத்தில் விடப்பட்ட ஒரு எழுத்தறிவற்ற சிறுவன் எவ்வாறு நூறாண்டுகளுக்கு மேல் நீடித்த உலக வரலாற்றின் மிகப்பெரிய நிலப் பேரரசை அமைத்தான் என்பது மேற்கத்திய வரலாற்றாசிரியர்களை இன்றும் குழப்பும் விஷயம் ஆகும். செங்கிஸ் கானிடம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை (charisma) இருந்தது. இவரது பல தளபதிகள் பல்வேறு தருணங்களில் இவரால் கவர்ந்திழுக்கப்பட்டே இவருடன் இணைந்தனர்.<ref>{{cite book|first= ஃப்ராங்க்|last= மெக்லின்|title= உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான்| chapter = அத்தியாயம் 6|page=20| accessdate= செப்டம்பர் 4, 2018|isbn=978-1-4464-4929-5|date=2015}}</ref> செங்கிஸ் கானின் வாழ்க்கையில் ஒரு தளபதி கூட இவரைவிட்டு விலகியது கிடையாது. செங்கிஸ் கான் என்றுமே தன் நண்பர்களை ஆபத்தில் விட்டுவிட்டுச் சென்றதோ அல்லது அவர்களுக்குத் கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறியதோ கிடையாது.<ref>{{Cite book| last = மைக்கேல்| first = ப்ரவ்டின்| title = மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு| url = https://archive.org/details/in.ernet.dli.2015.325365| publisher=ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ்| year = 1940| page = 130| isbn = 978-1-138-53687-6}}</ref> செங்கிஸ் கான் மனிதர்களைப் படிப்பதில் ஒப்பற்றவராக விளங்கினார். மனித உளவியலை நன்றாக அறிந்திருந்தார்.<ref>{{cite book|first= ஃப்ராங்க்|last= மெக்லின்|title= உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான்| chapter = அத்தியாயம் 6|page=2| accessdate= செப்டம்பர் 4, 2018|isbn=978-1-4464-4929-5|date=2015}}</ref> தன் பேரக்குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்தினார்.<ref>{{cite book|first= ஃப்ராங்க்|last= மெக்லின்|title= உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான்| chapter = அத்தியாயம் 6|page=22| accessdate= செப்டம்பர் 4, 2018|isbn=978-1-4464-4929-5|date=2015}}</ref> மாடுமேய்ப்பவர்கள் மற்றும் குதிரைமேய்ப்பவர்கள் என்ன உடை உடுத்தினரோ அதையே தான் தானும் உடுத்தினார். அவர்கள் என்ன உணவு உண்டனரோ அதையே தான் தானும் உண்டார்.<ref>{{cite book|first= ஃப்ராங்க்|last= மெக்லின்|title= உலகை வென்ற மனிதன் செங்கிஸ் கான்| chapter = அத்தியாயம் 13|page=23| accessdate= செப்டம்பர் 4, 2018|isbn=978-1-4464-4929-5|date=2015}}</ref> மன்னன் என்பதால் வசதியான வாழ்க்கை வாழவில்லை. ஆடம்பரத்தை வெறுத்தார். எளிமையை விரும்பினார். பல செல்வந்த நாடுகளை வென்றபோதும் அவர் தனக்கென ஒரு வீடு கூட கட்டிக்கொண்டது கிடையாது. ஒரு கூடாரத்தில் பிறந்தார், கூடாரத்திலேயே இறந்தார்.
 
சாவோ ஹங் என்ற சாங் வம்சத்துத் தூதர் செங்கிஸ் கானைச் சந்தித்தபோது அவர் பேரரசருக்கான எந்த சிகை அலங்காராமும் இன்றி ஒரு சாதாரண படைவீரனைப் போல் உச்சத்தலையில் முடியின்றி, தலையின் முன் பக்கம் மற்றும் இரு பக்கவாட்டிலும் தோள்களில் படும்படி முடியுடன் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.<ref>{{Cite book|last=வெதர்போர்டு|first= ஜாக் |url=https://books.google.co.in/books?id=AWF_CwAAQBAJ&printsec=frontcover&dq=Genghis+Khan+and+the+Quest+for+God:+How+the+World%27s+Greatest+Conqueror+Gave+Us+Religious+Freedom&hl=en&sa=X&ved=0ahUKEwiEuoysqqXYAhXLso8KHdQKBGUQ6AEIJjAA#v=onepage&q=Genghis%20Khan%20and%20the%20Quest%20for%20God%3A%20How%20the%20World's%20Greatest%20Conqueror%20Gave%20Us%20Religious%20Freedom&f=false | title= செங்கிஸ் கான் மற்றும் கடவுளுக்கான தேடல்: உலகத்தின் மகா படையெடுப்பாளர் எவ்வாறு நமக்குச் சமய சகிப்புத் தன்மையை வழங்கினார் |year=2016 |publisher=பென்குயின் பதிப்பகக் குழுமம் |place= நியூயார்க் |page= 11}}</ref> மங்கோலிய அரசவை ஒரு பெரிய கூடாரத்திற்குள் அமைந்திருந்தது. அந்த அவையில் அணிகலன் எதுவும் இன்றி இருந்த ஒரே நபர் செங்கிஸ் கான் தான். அவர் உடையாக உடுத்தியதும் ஒரு பழைய ஆடையைத்தான். இவ்விஷயத்தில் செங்கிஸ் கான் பிடிவாதமாக இருந்தார். கரகோரம் என்ற தலைநகரை உருவாக்கியபோதும் அங்கு வாழும் எண்ணம் எதுவும் செங்கிஸ் கானுக்கு இல்லை. "ஒருவேளை என் பிள்ளைகள் கல் வீடுகளிலும் சுவர் கொண்ட நகரங்களிலும் வாழலாம். ஆனால் நான் வாழமாட்டேன்" என்றார். கடைசிவரை நாடோடியாக வாழவே ஆசைப்பட்டார். அவரது உள்ளுணர்வின்படி அவர் மக்களுக்குத் தகுந்த வாழ்க்கையும் இதுவாகத்தான் இருந்தது.<ref>{{Cite book| last = மைக்கேல்| first = ப்ரவ்டின்| title = மங்கோலியப் பேரரசு அதன் வளர்ச்சி மற்றும் மரபு| url = https://archive.org/details/in.ernet.dli.2015.325365| publisher=ப்ராட்போர்ட் மற்றும் டிக்கன்ஸ்| year = 1940| page = 205| isbn = 978-1-138-53687-6}}</ref> தங்கள் தலைவனை செங்கிஸ் கானிடம் காட்டிக் கொடுத்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் தங்கள் தலைவனுக்கு விசுவாசமாக செங்கிஸ் கானை எதிர்த்துப் போரிட்டவர்கள் செங்கிஸ் கானால் நல்ல முறையில் நடத்தப்பட்டுள்ளனர். ஏழைகள் யாரேனும் ஆடையின்றி இருந்தால் தான் அணிந்திருக்கும் ஆடையை அவர்களிடம் கழட்டிக்கொடுத்து விடுவார் என்று இவரைப் பற்றிக் கூறப்பட்டது. செங்கிஸ் கானுக்குத் தான் சவாரி செய்யும் குதிரையைக் கொடையாகக் கொடுக்கும் பண்பு இருந்தது.<ref>{{cite book|first= வாசிலி|last= பர்தோல்ட்|title= துருக்கிஸ்தான் மங்கோலியப் படையெடுப்பு வரை|page=460|date=1928}}</ref> ஒருமுறை அலகுஸ் டிகின் என்ற ஒங்குட் இனத் தலைவர் நைமர்களை எதிர்த்து செங்கிஸ் கானுடன் இணைந்தார். இதன் காரணமாகக் கொல்லப்பட்டார். செங்கிஸ் கான் அக்குடும்பத்தை பழைய நிலைக்கு உயர்த்தினார். அவரின் மகனுக்குப் பணி வழங்கினார். தன் சொந்த மகளை அவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். எலு லுகோ என்ற கிதான் இளவரசன் குவாரசாமியப் போரில் உயிரிழந்தார். அவரின் விதவை மனைவி செங்கிஸ் கானை அவரின் இறுதிப் போரான கன்சு படையெடுப்பின்போது சந்தித்தார். அவரை கருணையுடன் வரவேற்ற செங்கிஸ் கான் அவரது இரு மகன்களையும் தந்தையைப் போல் பாசத்துடன் நடத்தினார். இச்செயல்கள் அவரினுள் இருந்த ஒரு உன்னதமான மனிதனை நமக்குக் காட்டுகிறது.<ref>{{Cite book| last = கிரவுசட் | first = ரீன்| title = புல்வெளிகளின் பேரரசு: நடு ஆசியாவின் வரலாறு | publisher=ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகப் பதிப்பகம்| year = 1970| page = 250}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/செங்கிஸ்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது