மே நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்று சேர்ப்பு
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox holiday
|holiday_name = சர்வதேச தொழிலாளர்கள் தினம்
வரி 21 ⟶ 20:
 
=== தொழிலாளர் போராட்டம் ===
18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] தோன்றிய [[சாசன இயக்கம்]] (''chartists'') ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும்.
 
=== பிரான்சில் தொழிலாளர் இயக்கம் ===
வரி 40 ⟶ 39:
 
== சிக்காகோ பேரெழுச்சி ==
[[மே 3]], 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் [[மே 4]] அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு [[ஜூன் 21]], [[1886]] அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு [[ஹேமார்க்கெட் படுகொலை]] என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. <ref name="Foner">{{Cite book |last=Foner |first=Philip S. |url=https://archive.org/details/maydayshorthisto0000fone |title=மேதினம்: A Short History of the International Workers' Holiday, 1886–1986 |publisher=International Publishers |year=1986 |isbn=0-7178-0624-3 |location=New York |pages=[https://archive.org/details/maydayshorthisto0000fone/page/41 41–43] |author-link=Philip S. Foner |url-access=registration}}</ref>
 
== அமெரிக்காவின் கறுப்பு தினம் ==
வரி 56 ⟶ 55:
 
இந்தியாவில் சென்னை மாநகரில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியும் [[ம. சிங்காரவேலர்]] 1923இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். <ref>{{Cite news |url=https://www.sathiyam.tv/labours-day-special-story-in-sathiyam-tv/ |title=உழைப்பாளர் தினம் உருவான வரலாறு – சிறப்பு தொகுப்பு |date=01 மே 2019 |work=சத்தியம் தொலைக்காட்சி |access-date=19 அக்டோபர் 2020}}</ref>
https://www.sathiyam.tv/labours-day-special-story-in-sathiyam-tv/
 
== மே தினச் நினைவுச் சின்னங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது