முளைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
விதை முளைத்தலானது, விதைக்குள்ளானதும், விதைக்கு வெளியானதுமான காரணிகளால் கட்டுப்படுத்தப்படும். அகக்காரணியில் முக்கியமானது வித்தின் உறங்குநிலையாகும். வெளிக்காரணிகளில் முக்கியமானவை [[வெப்பநிலை]], [[நீர்]], [[ஆக்சிசன்]], அத்துடன் சிலசமயம் [[ஒளி]] அல்லது [[இருள்]]<ref name="Raven">{{cite book | last = Raven | first = Peter H. | coauthors = Ray F. Evert, Susan E. Eichhorn | title = Biology of Plants, 7th Edition | publisher = W.H. Freeman and Company Publishers | year = 2005 | location = New York | pages = 504–508 | isbn = 0-7167-1007-2}}</ref> என்பவையாகும். வெவ்வேறு தாவரங்களில் முளைத்தல் வெவ்வேறு வகையில் கட்டுப்படுத்தப்படும். பொதுவாக இக்காரணிகளின் தாக்கம் தாவரங்களின் வகைக்கேற்பவும், அவற்றின் இயற்கையான [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழிடத்தின்]] தன்மை, அங்குள்ள [[காலநிலை]] மாற்றங்கள் என்பவற்றிற்கு ஏற்பவும் அமையும்.
===நீர்===
பொதுவாக முதிர்ந்த விதைகள் உலர்ந்த நிலையிலேயே காணப்படும். எனவே அவை முளைத்தலுக்கு தயாராவதற்கு, அதற்கான [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றவளர்சிதைமாற்றச்]] செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தேவையான குறிப்பிட்டளவு நீரை உள்ளெடுக்கும். நீரை உள்ளெடுத்து அவை வீங்கும்போது வித்துறை உடைந்து, முளைத்தலுக்கு வழிவிடும். அத்துடன் விதையினுள் இருக்கும் சேமிக்கப்பட்ட உணவானது நீர்ப்பகுப்பு [[நொதியம்|நொதியங்களின்]] தாக்கத்தினால் முளைத்தலின்போதுமுளைத்தலிற்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கும் நிலைக்கு மாற்றமடையவும் நீர் தேவைப்படும்.
 
===ஆக்சிசன்===
முளைத்தலின்போது, அதற்கான ஆற்றலைப் பெற, விதையினுள் நிகழும் வளர்சிதைமாற்றத்திற்கு ஆக்சிசன் தேவைப்படும்<ref>S. M. Siegel, L. A. Rosen (1962) ''Effects of Reduced Oxygen Tension on Germination and Seedling Growth'' Physiologia Plantarum 15 (3), 437–444 {{doi|10.1111/j.1399-3054.1962.tb08047.x}}</ref>. வித்தானது வளர்ந்து இலைகளைத் தோற்றுவித்து, பின்னர் [[சூரியன்|சூரிய]] ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறும்வரை, அதற்குத் தேவையான ஆற்றல் [[உயிரணு ஆற்றல் பரிமாற்றம்]] மூலமாகவே வழங்க வேண்டியிருப்பதனால் ஆக்சிசன் முக்கியமாகும். [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] இருக்கும் ஆக்சிசன், [[மண்|மண்ணில்]] உள்ள இடைவெளிகள் மூலம் விதைக்கு கிடைக்கும். மண்ணில் ஆழமாக விதை இருப்பின், அதற்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் முளைத்தல் பாதிக்கப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/முளைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது