சிம் சா சுயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
No edit summary
 
வரிசை 1:
[[File:HK Tsim Sha Tsui 200901.jpg|thumb|280px|சிம் சா சுயி நகரம், வான்பார்வை]]
[[File:Tsim Sha Tsui Waterfront.jpg|thumb|280px|சிம் சா சுயி, [[கவுலூன் தீபகற்பம்|கவுலூன் தீபகற்பத்தின்]] முனை]]
'''சிம் சா சுயி''' ''(Tsim Sha Tsui)'' [[ஹொங்கொங்]], [[கவுலூன்]] தெற்கில் அமைந்திருக்கும் ஒரு [[நகரம்]] ஆகும். இதனை சுருக்கமாக '''TST''' என்றும் குறிக்கப்படும். இந்நகரம் [[யவ் சிம் மொங் மாவட்டம்|யவ் சிம் மொங் மாவட்டத்தில்]] உள்ளது. புவியியல் ரீதியாக [[கவுலூன் தீபகற்பம்|கவுலூன் தீபகற்ப]] நிலப்பரப்பின் முனையில் [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தினை]] எதிரே கொண்டுள்ளது. [[1860]] ஆம் ஆண்டளவில் [[பிரித்தானியா|பிரித்தானியர்]] இப்பகுதி நிலப்பரப்பைக் கைப்பற்றும் முன்பு பல மீனவக் கிராமங்களாகவே இந்த நிலப்பரப்பாகவே இருந்துள்ளது. அதன் பின்னர் பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பாரிய வளர்ச்சிமிக்க ஒரு நகராக தோற்றம் பெறத் தொடங்கியது. மலைத்தொடர்களும், [[மலை|மலைக்குன்றுகளும்]] நிறைந்த இவ்விடம் இன்று அவற்றை காண முடியாதவாறு புனரமைக்கப்பட்டு எங்கும் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. அத்துடன் இந்த நகரம் ஹொங்கொங்கில் மக்கள் நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றும் ஆகும்.
 
இந்த சிம் சா சுயி நகரின் ஒரு பகுதியான [[சிம் சா சுயி கிழக்கு]], [[ஹொங் ஹாம் குடா]]வை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மானத் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.
 
==சுற்றுலா மற்றும் தங்குமிடம்==
சிம் சா சுயி நகரம் [[ஹொங்கொங்]] வரும் [[சுற்றுலா|சுற்றுலாப்]] பயணிகளின் மையமாகவே காணப்படுகின்றன. உலகின் அனைத்து விதமான [[உணவு]] வகைகளும் கிடைக்கக்கூடிய வெவ்வேறு நாட்டு உணவகங்கள் உள்ளன. ஹொங்கொங்கில் மிகவும் மலிவான தங்குமிடங்கள் உள்ள நகரங்களில் இது முதன்மையானதாகும். HK$100 டொலர்கள் முதல் HK$650 வரையான நாள் வாடகை தங்குமிடங்கள் உள்ளன. அதேவேளை வசதியான மூன்று நட்சத்திர, ஐந்து நட்சத்திர சொகுகங்கள் பலவும் உள்ளன. மற்றும் ஹொங்கொங்கில் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய ஒரு மையமாகவே இந்த நகரம் விளங்குகின்றது. [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவுக்கு]] செல்வதற்கான [[சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறை]]யும் இந்த நகரில் உள்ளது. அதேவேளை ஹொங்கொங்கில் இருந்து [[சீனா]] செல்வதற்கான [[சிம் சா சுயி கிழக்கு எம்டிஆர் தொடருந்தகம்|எம்டிஆர் கிழக்கு தொடருந்தகச் சேவை]] வசதியும் உள்ளது.
 
==சிறப்பு==
[[File:Tsim Sha Tsui Star Ferry Pier.jpg|thumb|சிம் சா சுயி நகரில் உள்ள [[சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறை|இசுடார் வள்ளத்துறையில்]] இசுடார் வள்ளங்களின் காட்சி]]
இந்த நகரம் பல [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகங்களைக்]] கொண்டுள்ளது. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் [[நட்சத்திரங்களின் சாலை]], [[கவுலூன் பூங்கா]], [[வான்வெளி அருங்காட்சியம் (ஹொங்கொங்)|வான்வெளி அருங்காட்சியம்]], [[சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்]], [[விக்டோரியா துறைமுகம்]] போன்றனவும் உள்ளன. அத்துடன் கின்னஸ் நூலில் இடம்பெற்ற, உலகிலேயே ஒவ்வொரு நாளும் நடாத்தப்படும் [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சு]] பார்ப்பதற்கு அதிகமானோர் இந்த நகரில் உள்ள நட்சத்திரங்களின் சாலையில் கூடுவர்.
 
மேலும் சிறப்பு நாட்களில் [[வண்ண வான்வெடி முழக்கம் (ஹொங்கொங்)|வண்ண வான்வெடி முழக்கம்]] இடம்பெறும் போது இந்த நகரம் முழுதும் மக்கள் நெரிசல் ஏற்படும்.
வரிசை 25:
 
==தமிழர்கள்==
ஹொங்கொங்கில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு நகரம் இந்த "சிம் சா சுயி" நகரமே ஆகும். தமிழருக்கு சொந்தமான பல [[வணிகம்|வணிக மையங்கள்,]] நிறுவனங்கள், உணவகங்கள் போன்றன இந்த நகரில் ஆங்காங்கே உள்ளன. குறிப்பாக சிம் சா சுயி நகரில் அமைந்திருக்கும் [[சுங்கிங் கட்டடம்|சுங்கிங் கட்டடத்தில்]] [[தமிழர்|தமிழருக்கு]] சொந்தமான பல வணிகக் கடைகள் உள்ளன. ஹொங்கொங்கில் வெளி மாவட்டங்களில் வசிப்போரும் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி வந்து கூடும் ஒரு இடம் இந்த சிம் சா சுயி நகரமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிம்_சா_சுயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது