கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Singapore from above.jpg|thumb|upright=1.35|alt=சிங்கப்பூர் துறைமுகம்|மனித நாகரிக வளர்ச்சியிலும் வணிகத்திலும் கடல்கள் முதன்மையான ஒன்றாகவே எப்போதும் விளங்கிவருகின்றன. படத்தில் சிங்கப்பூரும் அதன் துறைமுகமும் காட்டப்பட்டுள்ளன. இத்துறைமுகமே உலக அளவில் மிகவும் பரபரப்பான நீர்வழிகளுள் ஒன்றாகவும் இருக்கிறது.]]
 
'''கடல்''' ({{audio|Ta-கடல்.ogg|ஒலிப்பு}}) அல்லது '''ஆழி'''(''Sea''), '''உலகப் [[பெருங்கடல்]]''' (''World ocean''), அல்லது வெறுமனே '''பெருங்கடல்''' (''Ocean'') என்பது [[புவி]]யின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள [[உப்பு நீர்|உப்பான நீர்]] கொண்ட இணைந்த (connected) [[நீர்நிலைகள்|நீர்நிலை]] ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு [[நீர் சுழற்சி]], [[கார்பன் சுழற்சி|கரிமச் சுழற்சி]], [[நைட்ரஜன் சுழற்சி]] ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான [[கடலியல்]] அல்லது [[கடலியல்|பெருங்கடலியல்]] என்பது பெரும்பாலும் [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலை]] [[ஜேம்ஸ் குக்]] 1768க்கும்1768 1779க்கும்க்கும் 1779 க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததில் இருந்துதான் தொடங்குகிறது. ''கடல்'' எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது."கடல்" என்ற சொல்லாவது, கடத்தற்கு அரியதென்று என பொருள்படும். ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முதலானும் குறிக்கப்படுகிறது.
 
கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் [[சோடியம் குளோரைடு]] (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் [[மக்னீசியம்]], [[கால்சியம்]], [[பொட்டாசியம்]] போன்ற [[உப்பு (வேதியியல்)|உப்புகளும்]] மேலும் பல [[தனிமம்|தனிமங்களும்]] உள்ளன. இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. [[உவர்ப்புத் தன்மை]] (salinity) இடத்திற்கேற்றார்போல் வெகுவாக வேறுபடுகிறது. [[கடற்கரை|கரைக்கு]] அருகிலும் [[கழிமுகம்|கழிமுகப் பகுதியிலும்]] (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழக்கடல் பகுதியிலும் உவர்ப்புத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் "ஒப்புமை" வீதங்கள்விதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் [[அலைகள்]] உருவாகின்றன. இவை ஆழக்குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் [[உடைபடு அலை|உடைந்து]] சிதறுகின்றன. வீசும் காற்றின் [[உராய்வு|உராய்வின்]] மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி ([[சுழலகற்சி விளைவு]]; ''Coriolis effect'') போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. [[வெப்ப உவர்நீர் நீரோட்டம்|உலகளாவிய இயங்கு பட்டை]] என்று அறியப்படும். ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. [[ஓதம்|ஓதங்கள்]] தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன. ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட [[ஆழிப்பேரலை]]கள் கடலடி [[நிலநடுக்கம்|நிலநடுக்கங்களால்]] ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் [[கண்டத்தட்டு]] நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய [[விண்வீழ்கல்|விண்வீழ்கற்களால்]] ஏற்படுகின்றன.
 
[[வைரசுகள்]], [[பாக்டீரியா|பாக்டீரியங்கள்]], புரோடிஸ்ட்கள், [[பாசி]]கள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெரும் அளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன. குறுக்குக் கோடு வாக்கில் (latitude) கடலின் தன்மையும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, [[ஆர்க்டிக்]] பனிக்கு அடியில் குளிர் நீரையும் [[வெப்ப மண்டலம்|வெப்ப மண்டலப் பகுதிகளில்]] வண்ணமயமான [[பவளப் பாறைகள்|பவளப் பாறைகளையும்]] கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன (evolved). மேலும், [[உயிர்த்தோற்றம்|உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும்]].
"https://ta.wikipedia.org/wiki/கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது