ஜெயலலிதா நினைவிடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Jayalalithaa memorial.jpg|thumb|300px|ஜெயலலித..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:23, 26 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

ஜெயலலிதா நினைவிடம் என்பது சென்னை மெரினா கடற்கரையில் கட்்்டடப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் சமாதியாகும். இதனை ஜெயலலிதா நினைவிடம் என்று அழைக்கின்றனர்.இந்த நினைவிடம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிட வளாத்திலேயே அமைந்துள்ளது. இங்கு ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்கள் அடங்கிய நினைவரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.[1]

படிமம்:Jayalalithaa memorial.jpg
ஜெயலலிதா நினைவிடம்

நினைவிடத்திறப்பு

இந்த நினைவிடம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுவதற்காக 2018 மே 8ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு அவரால் 27.01.2021 அன்று திறக்கப்படவுள்ளது. [2]

அமைப்பு

இந்த நினைவிட கட்டுமானம் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் 79 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

பின்னணி

2016 டிசம்பர் 5 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து அவரது பூதவுடல் எம்.ஜி.ஆர் சமாதியின் பின்புறம் டிசம்பர் 6 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.அவ்விடத்தில் தற்போது நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

படக்கோப்பு

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயலலிதா_நினைவிடம்&oldid=3097116" இலிருந்து மீள்விக்கப்பட்டது