யெகோவாவின் சாட்சிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
[[படிமம்:C.T. Russell.gif|left|thumb|167px|சார்லசு ரசல் (1852–1916)]]
சார்லஸ் ரசல் என்ற அமெரிக்கர் தனது சபையில் பின்பற்றப்பட்ட விசுவாசப் பிரமாணங்கள் மீது ஐயம் கொண்டு பிற சபைக் கொள்கைகளையும் பைபிளையும் ஆராயத் துவங்கினார். இவர் '''வேதாகம மாணவர் அமைப்பு''' எனும் அமைப்பைத் துவங்கினர். இந்த அமைப்பு தான் யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் முன்னோடி. 1879 இல் '''சீயோனின் காவற்கோபுரப் பாதைச் சமூகம்''' என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக கோன்லி எனும் செல்வந்தர் இருந்தார். ரசல் இந்த அமைப்பின் இரண்டாவது தலைவரானார். இவர் தன் வாழ்நாளில் 50,000 பக்கங்களுக்கும் அதிகமாக எழுதினார். இவர் உயிர் வாழ்ந்த காலத்தில் இவர் எழுத்துகள் 2 கோடி புத்தகங்களாக உலகெங்கும் பல்வேறு மொழியில் வழங்கப்பட்டன. காவற்கோபுரம் என்ற பெயரில் தற்போது வெளியிடப்படும் இதழையும் இவர் தொடங்கினார். காவற்கோபுரம் தவிர வேறு எந்த இதழையும் சீயோனின் காவற்கோபுர அமைப்பு வெளியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டளைகளை தனது உயிலில் எழுதியிருந்தார். 1916 ஆம் ஆண்டில் இவர் மரணமடைந்தார்.
 
கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சி.டி. ரஸ்ஸல் 1912 இல் பிரசங்கித்த இடம் இப்போது ரஸ்ஸல்புரம் என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா ரஸ்ஸலை அரண்மனைக்கு அன்புடன் வரவேற்றார். திருவனந்தபுரத்தில் உள்ள விக்டோரியா ஜூபிலி ஹால் (வி.ஜே.டி) மண்டபத்தில் ரஸ்ஸல் பேசவும் அவர் ஏற்பாடு செய்தார். மகாராஜா பைபிளையும், ரஸ்ஸலின் புத்தகமான 'வேதங்களின் ஆய்வு' புத்தகத்தின் தொகுதிகளேயும் ஏற்றுக்கொண்டார். ரஸ்ஸலின் படம் மன்னரால் கேட்கப்பட்டது, பின்னர் அரண்மனையில் வைக்கப்பட்டது. <ref>{{Citation|title=History of Russelpuram, Near Balaramapuram, Thiruvananthapuram (India) {{!}} English Documentary|url=https://www.youtube.com/watch?v=CMKW7e1UjSc|accessdate=2021-02-24|language=ta-IN}}</ref>
 
=== ஜோசஃப் பிராங்க்ளின் ரூதர்ஃபோர்டு ===
"https://ta.wikipedia.org/wiki/யெகோவாவின்_சாட்சிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது