மெய்கண்ட தேவர், [[திருவெண்ணெய்நல்லூர்|திருவெண்ணெய்நல்லூரில்]],திருபெண்ணாகடத்தில் கார்காத்த வெள்ளாளர் [[சைவ வெள்ளாளர்]] அதாவது [[ஒளியர்]] குலத்தில் பிறந்தவர்.{{cn}} [[கிபி]] [[13ம் நூற்றாண்டு|13 ஆம் நூற்றாண்டின்]] முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் பரஞ்சோதிதிருக்கைலாய முனிவர்பரம்பரை என்னும்அக சந்தான குறவர்களில் ஒருவரான பரஞ்சோதி பெரியாரிடம்முனிவரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் [[அருணந்தி சிவாச்சாரியார்]] தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் [[சிவஞான சித்தியார்]], [[இருபா இருபஃது]] என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான [[மனவாசகம் கடந்தார்]] என்பவர் [[உண்மை விளக்கம்]] என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.