தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகைப்பாட்டியல்: *திருத்தம்*
→‎பரவுதல்: *திருத்தம்*
வரிசை 86:
தாவரங்களில் உள்ள தீநுண்மிகள் ஒரு தாவரத்திலிருந்து இன்னொரு தாவரத்திற்கு பொதுவாகப் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. விலங்குகளில் உள்ள தீநுண்மிகள் சில இரத்தம் உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகின்றன. இந்த நோய் தாங்கி வாழும் உயிரினங்கள் கடத்திகளாக அல்லது காவிகளாக அறியப்படுகின்றன. இருமல் மற்றும் தும்மல் போன்ற செயல்களின்போது ஒருவருக்கு இருக்கும் [[இன்ஃபுளுவென்சா]]விற்குக் காரணமான தீநுண்மிகள் [[மூச்சுத் திவலை]]கள் மூலம் பரவுகின்றன. நோரோவிரசு ([[:en:Norovirus]]) மற்றும் ரோட்டாவிரசு ([[:en:Rotavirus]]) வகை தீநுண்மிகள் வாய் வழி உணவுகள் வழியாகவோ அல்லது ஒருவரையொருவர் தொடுதல் மூலமோ பரவுகின்றன. பொதுவாக வைரசுகளின் பாதிக்கும் அளவு குறுகியதாகவும் பரந்துபட்ட அளவிலும் இருக்கிறது <ref>Shors pp. 49–50</ref>.
 
விலங்குகளில் நோயெதிர்ப்புத் திறனைத் தூண்டும் [[தடுப்பூசி]]களால் நோயெதிர்ப்புத் திறனைத் அளிக்கமுடியும். குறிப்பிட்ட ஒரு தீநுண்மித் தொற்றுக்குச் செயற்கையாக ஒரு எதிர்ப்புச் சக்தியை அளிக்கமுடியும். இருப்பினும், எய்ட்சு போன்ற சில நோய்களை ஏற்படுத்தும் சில தீநுண்மிகள் இந்த நோயெதிர்ப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மையையும் தமக்குள் உருவாக்கிக் கொள்கின்றன. [[நுண்ணுயிர் எதிர்ப்பி]]கள் தீநுண்மிகளில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும், பல [[தீநுண்மியெதிர்ப்பு மருந்துகள்]] ([[:en:Antiviral drug]]) தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
 
== வைரசு மரபியல் ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது