தீநுண்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வைரசுகளைப் பற்றிய அறிமுகம் கட்டுரையிலிருந்து தகவல் மாற்றம்
வைரசுகளைப் பற்றிய அறிமுகம் கட்டுரையிலிருந்து தகவல் மாற்றம்
வரிசை 23:
== தோற்றம் ==
வாழ்வின் [[பரிணாம வளர்ச்சி|பரிணாம அல்லது படி வளர்ச்சி வரலாற்றில்]] தீநுண்மிகளின் தோற்றம் குறித்துத் தெளிவாக இல்லை. இவை உயிரணுக்களுக்கிடையில் நகரும் தன்மைகொண்ட டி.என்.ஏ.யான [[கணிமி]]களில் (plasmid) இருந்தோ அல்லது பாக்டீரியாக்களில் இருந்தோ தோன்றியிருக்கலாம். படி வளர்ச்சியில் கிடைமட்ட மரபணுக் கடத்தலிற்கான (அதாவது பெற்றோரிலிருந்து சந்ததிக்கு மரபணு கடத்தப்படுவது போலன்றி, ஒருகல, பல்கல வெவ்வேறு உயிரினங்களுக்கிடையில் மரபணுப் பரிமாற்றம் நிகழ்வது) முக்கிய வழிமுறையாக வைரசுகள் செயல்படுகின்றன. அதனால் இவை [[பாலியல் இனப்பெருக்கம்|பாலியல் இனப்பெருக்கத்தில்]] போன்று [[மரபியற் பல்வகைமை]]யைக் கூட்டுவதில் உதவுகின்றன.<ref name="Canchaya">{{cite journal|author=Canchaya C, Fournous G, Chibani-Chennoufi S, Dillmann ML, Brüssow H|title=Phage as agents of lateral gene transfer|journal=Current Opinion in Microbiology |volume=6 |issue=4 |pages=417–24 |year=2003 |pmid=12941415|doi=10.1016/S1369-5274(03)00086-9}}</ref>
 
== கண்டுபிடிப்பு ==
[[படிமம்:HIV-budding-Color cropped.jpg|left|upright|thumbnail|[[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி|அலகிடு எலக்ட்ரான் நுண்ணோக்கி]] யில் எச்.ஐ.வி-1 வைரசு பச்சை நிறத்தில். [[நிணநீர்ச் செல்]]லில் இருந்து வெளிப்படுறது.]]
1884-ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த சார்லசு சேம்பர்லேண்டு எனும் ஆய்வாளர் சேம்பர்லேண்டு வடிகட்டி என்று அறியப்படும் ஒரு வடிகட்டியை உருவாக்கினார். இதன் துளைகள் பாக்டீரியாவினை விடச் சிறியன. இதன் மூலம் இவர் பாக்டீரியம் உள்ள ஒரு நீர்மத்தை இந்த வடிகட்டியில் வடிகட்டும் போது பாக்டீரியங்கள் நீர்மக் கரைசலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டன. 1890-களில் திமித்ரி இவானோவ்சுக்கி என்னும் இரசிய உயிரியியலார் இந்த முறையைப் பயன்படுத்தி புகையிலை மொசாயிக்கு வைரசு என்பதைப் பற்றி ஆராய்ந்தார். அதாவது, பாதிக்கப்பட்ட புகையிலைகளை அரைத்து அதை வடிகட்டிய பின் கிடைத்த நீர்மம் மீண்டும் புகையிலையில் நோயை உண்டுபண்ணக்கூடியதாக இருந்தது.
 
அதே காலகட்டத்தில் வேறுபல ஆய்வாளர்கள் பாக்டீரியத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு சிறிதான (பின்னாளில் வைரசு என்று அழைக்கப்பட்ட) அந்தப் பொருட்கள் கூட நோயை உண்டாக்க வல்லன என்று கண்டறிந்தனர். 1899-இல் மார்ட்டினசு பைசரிங்கு என்னும் இடச்சு ஆய்வாளர் இந்தப் பொருட்கள் பிரியும் செல்களில் மட்டுமே பெருகுவதை உணர்ந்தார். இவர் அதனை பரவக்கூடிய உயிருள்ள திரவம் என்று அழைத்தார். ஏனெனில் அவரால் கிருமி போன்ற துகள்களைக் கண்டறிய முடியவில்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரடெரிக்கு துவோர்த்து என்னும் ஆங்கில பாக்டீரிய ஆய்வாளர் பாக்டீரியத்தைத் தொற்றும் வைரசுகளைக் கண்டுபிடித்தார். பின்னர் பெலிக்சு தி-எரெல்லி என்னும் பிரெஞ்சு-கனேடிய ஆய்வாளர் [[அகார்]] என்னும் உணவுப் பொருளில் வளரும் பாக்டீரியாக்களுடன் வைரசுகளைச் சேர்க்கையில் அப்பகுதிகளில் பாக்டீரியாக்கள் இறந்துவிட்டதைக் கண்டறிந்தார். இந்த இறந்த பகுதிகளைக் கொண்டு அவரால் வைரசுகளின் எண்ணிக்கையைக் கணக்கிட முடிந்தது.<ref>{{cite journal | vauthors = D'Herelle F | title = On an invisible microbe antagonistic toward dysenteric bacilli: brief note by Mr. F. D'Herelle, presented by Mr. Roux. 1917 | journal = Research in Microbiology | volume = 158 | issue = 7 | pages = 553–54 | year = 2007 | pmid = 17855060 | doi = 10.1016/j.resmic.2007.07.005 }}</ref>
 
1931-இல் எலக்ட்ரான் நுண்ணோக்கி எனப்படும் [[எதிர்மின்னி நுண்ணோக்கி]] [[புத்தாக்கம்|புதிதாக உருவாக்கப்பட்ட]] பின் வைரசுகளின் படங்கள் கிடைக்கத்தொடங்கின.<ref>From ''Nobel Lectures, Physics 1981–1990'', (1993) Editor-in-Charge Tore Frängsmyr, Editor Gösta Ekspång, World Scientific Publishing Co., Singapore</ref> 1935-இல் வெண்டெல் மெரெடித்து ஸ்டான்லி என்பார் புகையிலை மொசாயிக்கு வைரசினை ஆராய்ந்து அது பெரும்பாலும் புரதத்தால் ஆனது என்று கண்டறிந்தார். சிறிது காலம் கழித்து அந்த வைரசு புரதத்தாலும் ஆர்.என்.ஏ வினாலும் ஆனது என்று கண்டறியப்பட்டது. தொடக்ககாலத்தில் உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்தாமல் வைரசுகளை எவ்வாறு வளர்ப்பது என்று தெரியவில்லை. இது வைரசுகளைப் பற்றிய ஆய்வில் ஒரு தடையாக இருந்தது. 1931-ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் எர்ணஸ்ட்டு வில்லியம் குட்பாச்சர்-உம் அலைசு மைல்சு வுட்ரபு-உம் இன்புளுவென்சா உள்ள பல வைரசுகளை கருவுற்ற கோழியின் முட்டையில் வெற்றிகரமாக வளர்த்தனர். 1949-இல் சான் பிராங்கிளின் என்டர்சு முதலானோர் போலியோ வைரசினை உயிருள்ள விலங்குகளின் செல் திசுக்களில் வளர்த்துக் காட்டினர்.<ref name="pmid15470207">{{cite journal | vauthors = Rosen FS | title = Isolation of poliovirus – John Enders and the Nobel Prize | journal = N. Engl. J. Med. | volume = 351 | issue = 15 | pages = 1481–83 | date = October 2004 | pmid = 15470207 | doi = 10.1056/NEJMp048202 }}</ref> இதன் மூலம் வைரசு ஆய்வில் இருந்த இச்சிக்கல் தீர்ந்தது. 4800-க்கும் மேலான வைரசு இனங்கள் இது வரை கண்டறியப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தீநுண்மி" இலிருந்து மீள்விக்கப்பட்டது