ஐக்கே காமர்லிங்கு ஓன்னசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
அக்காலத்தில் '''தாழ்ந்த வெப்பநிலையியல்''' என்பது புதிய துறையாகும். இவருக்கு முன்பு வாயுக்களைத் தாழ்ந்த வெப்ப நிலையில் திரவமாக்குவது என்பது நடைமுறைப் படுத்தப் படவில்லை. காமர்லிங்க் இந்த ஆய்வினை மேற்கொண்ட போது , பொருளின் அணுத்தன்மையின் முழு ஆய்வுச் சான்றை அறிய விரும்பினார். [[ஆக்சிசன்]], [[ஐதரசன்]], [[ஈலியம்]] முதலிய வாயுக்களை மிக அதிக அளவு தாழ்ந்த வெப்ப நிலைக்கு உட்படுத்தும் ஆய்வை மேற்கொண்டார்.
 
இக்கால கட்டத்தில், திரவம் ஆவியாகும் போது அங்கு ஒரு குளிர்ச்சி விளைவு ஏற்படுகிறது என்பதை [[சுவீடன்]] நாட்டு அறிவியலறிஞர் [[ஆர்.பி.ஃபிக்டெட்]] என்பவர் கண்டறிந்த்தார். அதே வருடத்தில் [[பிரெஞ்சு]] [[இயற்பியலாளர்கள்|இயற்பியலாளர்]] [[எல்.பி கெயிட்லெட்]] என்பவர் அதிக அழுத்தத்திற்கு ஆக்சிசனை உட்படுத்தியபோது அங்கு தாழ்ந்த வெப்ப நிலை உருவானதைக் கண்டறிந்தார். இறுதியாக, [[சே. பி. சூல்சு]] மற்றும் [[வில்லியம் தாம்சன்‎]] (இலார்டு கெல்வின்) ஒரு வாயுவை அதிக அழுத்தத்தில் மிகச் சிறிய திறப்பின் வழியே வாயுவின் தன்மைக்கேற்பக் குறிப்பிட்ட அளவு செலுத்தும்போது அதனுடைய வெப்பநிலை குறைவதைக் கண்டறிந்தார். [[1895]] இல் [[முனிச்|முனிச்சில்]] [[கார்ல் லிண்டே]] என்பவர் '''சூல்-தாம்சன் விளைவின்''' அடிப்படையில் [[வளிமம்|வளிமத்தை]] [[நீர்மம்|நீர்மமாக்கும்]] கருவியை உருவாக்கினார்.
 
== காமர்லிங்கின் கண்டுபிடிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கே_காமர்லிங்கு_ஓன்னசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது