திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நூலாசிரியர்: சொற்சுவைக்காகச் சாெற்களை இடம்மாற்றுதல்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
→‎நூலாசிரியர்: சொற்றொடரினை செம்மைப்படுத்துதல்
வரிசை 93:
|source=—[[பரிமேலழகர்]] (வள்ளுவரைப்<br/>பற்றிக் குறிப்பிடுகையில்),<br/>கி.பி. 13-ஆம் நூற்றாண்டு{{sfn|Aravindan, 2018|p=384}}}}
 
வள்ளுவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே சம அளவில் இருந்து வருகிறது. குறளில் காணப்படும் போதனைகள் பலவும் இந்து தர்ம நூல்களில் காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் சுட்டுகின்றனர்.{{sfn|Swamiji Iraianban|1997|p=13}}{{sfn|Sundaram, 1990|pp=xiii–xvii, குறள் 1103-இக்கான பின்குறிப்பு விளக்கம்}} அறம், பொருள், இன்பம் என்ற வீடுபேற்றினை நோக்கிய குறளின் பகுப்புமுறைகள் முறையே இந்து தர்ம புருஷார்த்த பகுப்பு முறையின் முதல் மூன்றின் அடிப்படையில் அமைந்திருப்பதும்,{{sfn|Johnson, 2009}}{{sfn|Sundaram, 1990|pp=7–16}} அகிம்சையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட குறள் பொருட்பாலில் இந்து தர்ம நூல்களில் ஒன்றான அர்த்தசாஸ்த்திரத்தினை ஒத்ததாய் அரசியல் மற்றும் போர்முறைகளைக் கூறியிருப்பதும்{{sfn|Kaushik Roy|2012|pp=152–154, இடம்: 144–154 (அத்தியாயம்: Hinduism and the Ethics of Warfare in South Asia)}} அவர்கள் காட்டும் சான்றுகளில் சில. தனிமனிதனாகத் தன் அன்றாட வாழ்வில் கொல்லாமையைக் கடைப்பிடித்த பின்னரே ஒருவனுக்குப் படைவீரனாகப் போரில் கொல்லும் விதிவிலக்கு அளிக்கப்படுவதும் மன்னனாக ஒருவன் அரியணையில் அமர்ந்த பின்னர்பின்னரே குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும்அளிக்கும் உரிமை அவனுக்கு வழங்கப்படுவதும் இந்து தர்ம முறையினை வலியுறுத்துகிறது.{{sfn|Ananthanathan, 1994|p=325}}{{Ref label|F|f|none}} வள்ளுவர் குறட்பாக்கள் 610 மற்றும் 1103-களில் [[திருமால்|திருமாலைக்]] குறிப்பிடுவதும் குறட்பாக்கள் 167, 408, 519, 565, 568, 616, மற்றும் 617-களில் [[இலக்குமி|இலக்குமியைக்]] குறிப்பிடுவதும் [[வைணவ சமயம்|வைணவ]] தத்துவங்களைக் குறிக்கின்றன.{{sfn|Kovaimani and Nagarajan, 2013|pp=145–148}}{{sfn|Natarajan, 2008|pp=4–5}} இந்து சமயத்திலிருந்து தோன்றிய சுமார் 24 வெவ்வேறு தொடர்களை குறள் முழுவதும் குறைந்தபட்சம் 29 இடங்களில் வள்ளுவர் எடுத்தாண்டிருப்பதை பி. ரா. நடராசன் பட்டியலிடுகிறார்.{{sfn|Natarajan, 2008|pp=4–5}} தருக்க ரீதியான முறையில் குறளை அலசினால் வள்ளுவர் இந்து என்பதும் அவர் சமணரல்லர் என்பதும் புலப்படும் என்று பிராமணீய மறுப்பு அறிஞரான [[பூர்ணலிங்கம் பிள்ளை]] கூறுகிறார்.{{sfn|Blackburn|2000|pp=464–465}} வள்ளுவர் தென்னிந்திய சைவ மரபினைச் சேர்ந்தவர் என்று [[மாத்தேயு ரிக்கா]] கருதுகிறார்.{{sfn|Ricard, 2016|p=27}} குறளானது [[அத்வைத வேதாந்த தத்துவம்|அத்வைத்த வேதாந்த மெய்யியலை]] ஒத்து இருப்பதாக தென்னக மக்கள் போற்றுவதாகவும் அது அத்வைத்த வாழ்வு முறையினை போதிப்பதாகவும் தென்னிந்தாவில் வசித்த இறையியல் அறிஞர் தாமஸ் மன்னினேசாத் கருதுகிறார்.{{sfn|Manninezhath, 1993|pp=78–79}}
 
அறிஞர்களுக்கிடையில் இவ்வளவு கருத்து வேறுபாடு இருப்பினும், வள்ளுவர் தனது சார்பற்ற தன்மையினாலும் அனைவருக்குமான பொது அறங்களைக் கூறுவதனாலும் அனைத்து சாரராலும் பெரிதும் போற்றப்படுகிறார். அனைத்து நூல்களிலும் காணப்படும் அனைத்து சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக [[பரிமேலழகர்]] உள்ளிட்ட அறிஞர்களால் வள்ளுவர் பெரிதும் பாராட்டப்படுகிறார்.{{Sfn | Chellammal, 2015 | p = 119}} அவரது நூலான குறள் "உலகப் பொதுமறை" என்று வழங்கப்படுகிறது.{{sfn|Zvelebil|1973|pp=155–156}}{{sfn|Natarajan, 2008|pp=1–6}}{{sfn|Manavalan, 2009|p=22}}{{sfn|Kovaimani and Nagarajan, 2013|p=489}}
"https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது