நிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது; அசுபால்ட்டை விட சற்றே கூடிய ஒளிர்வே உள்ளது.
 
புவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக் காலத்திலிருந்தே மனித சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், (இலக்கியம், [[சந்திர நாட்காட்டி|நாட்காட்டிகள்]], கலை, [[தொன்மவியல்|தெய்வங்கள்]] ) நிலவு மிகுந்த தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் [[ஓதம்|ஓதங்களும்]] நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான [[சூரிய கிரகணம்|சூரிய கிரகணத்தின்]] போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது. புவிக்கும் நிலவிற்கும் இடையேயான நேரோட்ட தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82±0.07&nbsp;செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது; ஆனால் இந்த கூடும் வீதம் நிலையாக இல்லை.<ref>{{cite web|url=http://lasp.colorado.edu/life/GEOL5835/Moon_presentation_19Sept.pdf|title=The Lunar Orbit Throughout Time and Space|first1=Adrienne|last1=Dove|first2=Stuart|last2=Robbins|first3=Colin|last3=Wallace|date=September 2005}}</ref>
 
புவியினுடையதை விட சற்றே குறைவாக, நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் [[செவ்வாய் (கோள்)]]-அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது.
 
புவியல்லாது [[நிலாவில் தரையிறக்கம்|மனிதர்கள் கால் பதித்த]] ஒரே வான்பொருள் நிலவாகும். [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] [[லூனா திட்டம்]] மனிதரில்லாத முதல் [[விண்கலம்|விண்கலத்தை]] 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]வின் [[அப்பல்லோ திட்டம்]] ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் [[அப்பல்லோ 8]]இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் [[அப்பல்லோ 11]]இல் சென்ற [[நீல் ஆம்ஸ்ட்றோங்]] ஆவார். இந்தத் திட்டங்கள் மூலம் 380&nbsp;கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.
 
1972இல் [[அப்பல்லோ 17]] திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் [[ஜப்பான்]], [[சீன மக்கள் குடியரசு]], [[இந்தியா]], ஐக்கிய அமெரிக்கா, மற்றும் [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் [[#நிலவில் நீர்|நிலவு நீர்]] இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் [[ஜேட் ராபிட்]] அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள [[சாங் ஈ 3]] திட்டம்.
 
[[File:Lunar eclipse October 8 2014 California Alfredo Garcia Jr mideclipse.JPG|thumb|left|222x222px|[[நிலவு மறைப்பு|நிலவு மறைப்பின்]] போது சிவப்பாகத் தோன்றும் நிலா.]]
வரிசை 70:
நிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.
 
இங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக "நிலவு வறண்டதாக பிறந்தது" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு (எதிர்பாராப் பொலிவு) விண்மீன் மோதலினால் (cataclysmic collision) கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான நீர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது.<ref>[http://www.sciencenews.org/view/generic/id/350303/description/Moons_water_may_have_earthly_origins Moon's water may have earthly origins] {{Webarchive|url=https://web.archive.org/web/20130607031654/http://www.sciencenews.org/view/generic/id/350303/description/Moons_water_may_have_earthly_origins |date=2013-06-07 }}, சயன்ஸ் நியூஸ், மே 9, 2013</ref>
 
1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளை அது கொண்டுள்ளது. எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.<ref>A. Saal et al. Hydrogen isotopes in lunar volcanic glasses and melt inclusions reveal a carbonaceous chondrite heritage. Science. Published online May 9, 2013. doi: 10.1126/science.1235142.</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது