பார்பரா நோஸ்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
மேலும் தரவுகள்
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
மேம்பட்ட தரவு
வரிசை 28:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
நோஸ்கே [[ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்|ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகத்தில்]] சமூக-கலாச்சார மானிடவியலில் முதுகலைப் (எம்.ஏ.) பட்டமும் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1990-களில் சுற்றுச்சூழல் ஆய்வுத் துறையில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டத்தில், [[டொராண்டோ]]வில் உள்ள [[யார்க் பல்கலைக்கழகம்|யார்க் பல்கலைக்கழகத்தில்]] நோஸ்கே சுற்றுச்சூழல் நெறிமுறைகள், சூழலியல், சுற்றுச்சூழல் பெண்ணியம் ஆகியவற்றைக் கற்பித்தார். பின்னர் [[சிட்னி பல்கலைக்கழகம்|சிட்னி பல்கலைக்கழகத்தில்]] மானுடம் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சித் துறை நிறுவனத்தில் ஆய்வாளராக பணியாற்றினார்.<ref>[{{Cite web|url=http://www.abolitionist-online.com/interview-issue02_barbara.noske.shtml|title=Abolitionist-Online - A Voice for Animal Rights|date=June 17, 2011|archive-url=https://web.archive.org/web/20110617051517/http://www.abolitionist-online.com/interview-issue02_barbara.noske.shtml Abolitionist|archive-online.com date=2011- Barbara Noske]06-17}}</ref>
 
நோஸ்கே மனித–விலங்கு உறவில் நிபுணத்துவம் பெற்றவர். அறிவியல், நெறிமுறை மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மனித–விலங்கு உறவில் எங்கெங்கு பிளவுக் கோடுகள் உள்ளன என்பதை கண்டறிவதில் அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. அவரது ஆய்வுக் கட்டுரைகள் கருப்பொருளாக விளங்குபவை சீரிய விலங்காராய்ச்சிக் கல்வி மற்றும் ஆழ்சூழலியல்சார் சுற்றுச்சூழல் பெண்ணியம் ஆகிய துறைகளாகும். 1989-ஆம் ஆண்டு தனது ''ஹ்யூமன்ஸ் அண்டு அதர் அனிமல்ஸ்'' ("மனிதர்களும் பிற விலங்குகளும்") என்ற நூலில் "விலங்குகள் நம்மால் கணினிகள், இயந்திரங்கள் போன்று வெறும் பயன்பாடுப் பொருட்களாகத் தரம் குறைக்கப்பட்டு விட்டன" என்று கூறி "விலங்குத் தொழிற்கூட்டு" என்ற சிந்தனையை அறிமுகப்படுத்தினார்.<ref name="sorenson2014">{{cite book|first=John|last=Sorenson|title=Critical Animal Studies: Thinking the Unthinkable|url=https://books.google.com/books?id=O85kAwAAQBAJ&q=Animal+industrial+complex |access-date=7 October 2018 |year=2014|publisher= Canadian Scholars' Press|location=Toronto, Ontario, Canada|pages=299|isbn=978-1-55130-563-9}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பார்பரா_நோஸ்கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது