திருப்பாச்சேத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
== திருப்பாச்சேத்தி அரிவாள் ==
[[படிமம்:Thirupatchiaruval.jpg|thumb]]
பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் தயாரிக்கப்படும் அரிவாள்கள் பிரபலமானது. இவ்வூரில் விடுதலை போராட்ட வீரர் [[உதயப்பெருமாள்|துப்பாக்கி கவுண்டரால்]] அரிவாள் அடிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்த திருப்பாச்சி அரிவாள் அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. விவசாயப் பணிகளுக்காக இந்த பல வகையான அரிவாள்கள் தயாரிக்கப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் பாடல்களில் திருப்பாச்சி அருவா எனப் பொதுவாக குறிப்பிடப்படுகிறது.திருப்பாச்சேத்தியின் அரிவாள் (நீளம், 1 முதல், 1.5 அடி வரை), வீச்சரிவாள் (2 அடிக்கு மேல்) பெயர் பெற்றதற்கு காரணங்கள் பல உண்டு. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தயாராகும் அரிவாளுக்கும், இங்கு தயாராகும் அரிவாளுக்கும் வித்தியாசம் என்னவென்றால், அரிவாளின் முனை (மூக்கு) வளைவும், பள பளவென தீட்டுவதால் பதமும் (கூர்மையும்) வேறு அரிவாளில் கிடையாது.இந்த அரிவாளில் வெட்ட, வெட்ட பதம் ஏறும் பக்குவம் இருப்பதால், திருப்பாச்சேத்தி தேடி வந்து வாங்கிச் செல்வர். அரிவாளின் எடையும் குறைவாக இருப்பதும் சிறப்பு. பிடித்து லாவகமாக வீசவும், கையாளவும் கையடைக்கமாக அரிவாளின் கைப்பிடி இருப்பதும் தனிச்சிறப்பு. இதனால், எவ்வளவு விலை இருந்தாலும், பேரம் பேசாமல் வாங்கிச் செல்கின்றனர். மன்னர்கள் காலத்தில், இங்கு போரிடுவதற்கு தகுந்த தடுப்பு கேடயம், வாள், கத்தி, வேல் கம்பு, சுருள் கத்தி, சூரி கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறை இருந்துள்ளது. போர்க் கருவிகள் தயாரிப்பு பட்டறையாகவும், ஆயுதக்கிடங்காகவும் இவ்வூர் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
 
சினிமாவில்: வீரத்தின் வெளிப்பாடாக வாள், வீச்சரிவாள் கையாளுவதை கருதுகின்றனர். இதனாலேயே சினிமாவிலும் திருப்பாச்சேத்தி அரிவாள், அக்காலத்தில், "தாய்க்குப்பின் தாரம்" படத்தில் எம்.ஜி.ஆர்., முதல், இன்றைய விஜய் படம் வரை, திருப்பாச்சேத்தி அரிவாள் இடம் பெற்றுள்ளது. திருப்பாச்சேத்தி முழு பெயரானது, மருவி, சினிமாவில், "திருப்பாச்சி' என்கின்றனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாச்சேத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது