ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 36:
 
== ககான் ==
[[File:CoronationOfOgodei1229.jpg|thumb|1229இல் ஒக்தாயியின் முடிசூட்டு விழா, ஓவியம் [[ரசீத்தல்தீன் அமாதனி|ரசீத்தல்தீன்]], ஆரம்ப 14ஆம் நூற்றாண்டு ஆரம்பம்]]
 
1219ஆம் ஆண்டில் [[குவாரசமிய அரசமரபு|குவாரசமியப் பேரரசு]] மீதான படையெடுப்புக்கு முன்னர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானிடம்]] அவரது வாரிசைத் தேர்ந்தெடுக்குமாறு பேரரசி இசுயி அறிவுறுத்தினார். சூச்சி மற்றும் சகதாயி ஆகிய இரண்டு மூத்த மகன்களுக்கு இடையிலான சச்சரவுக்குப் பிறகு அவர்கள் ஒக்தாயியை வாரிசாகத் தேர்ந்தெடுக்க ஒப்புக் கொண்டனர். செங்கிஸ் கான் இந்த முடிவை உறுதி செய்தார்.
வரிசை 45:
 
இவரது உளங்கவர் திறன் பற்றி வரலாறுகள் குறிப்பிட்டுள்ள போதும், 1237ஆம் ஆண்டு இவர் செய்த ஒரு குற்றத்திற்காக மங்கோலிய மற்றும் பாரசீக வரலாற்றாளர்கள் ஒக்தாயியை விமர்சிக்கின்றனர். பாரசீக வரலாற்றாளர்களின் கூற்றுப்படி, அச்செயலானது ஏழு வயதுக்கு மேற்பட்ட 4,000 [[ஒயிரட்கள்|ஒயிரட்]] பெண்களைத் தனது இராணுவத்தினரைக் கொண்டு கற்பழிப்புச் செய்ய வைத்ததாகும். பிறகு இப்பெண்கள் கைப்பற்றப்பட்டு ஒக்தாயியின் அந்தப் புரத்துக்கோ அல்லது மங்கோலியப் பேரரசு முழுவதும் இருந்த யாம் தங்கும் விடுதிகளுக்கு விலைமாதர்களாகவோ கொடுக்கப்பட்டனர்.<ref name="Weatherford, Jack. 2011 89–90">{{Cite book|title=The secret history of the mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire|last=Weatherford, Jack.|year=2011|isbn=9780307407160|pages=89–90|oclc=915759962}}</ref> ஒக்தாயியின் சகோதரி செச்சயிகன் ஒயிரட் நிலங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரது இறப்பிற்குப் பிறகு இச்செயலால் ஒயிரட் நிலங்கள் ஒக்தாயியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.<ref>{{Citation|last=Weatherford, Jack, 1946-|title=The secret history of the Mongol queens : how the daughters of Genghis Khan rescued his empire|year=2010|publisher=Crown Publishers|isbn=978-0307407153|oclc=951745549}}, pp. 90–91.</ref>
 
== உலகப் படையெடுப்புகள் ==
{{ஒக்தாயி கானின் படையெடுப்புகள்}}
 
=== மத்தியக் கிழக்கு விரிவாக்கம் ===
குவாரசமியப் பேரரசை அழித்த பிறகு, வேறு எந்தப்பணியுமின்றி செங்கிஸ் கான் [[மேற்கு சியா|மேற்கு சியாவை]] நோக்கி முன்னேறினார். எனினும் 1226ஆம் ஆண்டு குவாரசமியாவின் கடைசி மன்னனாகிய [[சலாலத்தீன் மிங்புர்னு]] தனது தந்தை [[இரண்டாம் அலாவுதீன் முகம்மது]] இழந்த பேரரசுக்குப் புத்துயிர் கொடுக்க [[ஈரான்|ஈரானுக்குத்]] திரும்பினான். மிங்புர்னுவுக்கு எதிராக 1227ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மங்கோலியப் படைகள் தமேகான் என்ற இடத்தில் தோற்கடிக்கப்பட்டன. சலாலத்தீனுக்கு எதிராக அணிவகுத்த மற்றொரு இராணுவமானது [[இசுபகான்|இசுபகானுக்கு]] அருகில் பெரும் இழப்பைச் சந்தித்த பிறகு ஒரு வெற்றியைப் பெற்றது. எனினும் அந்த வெற்றியை அவர்களால் தொடர முடியவில்லை.
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது