அழகு முத்துக்கோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரலாறு நன்கு ஆராய்ந்து தொகுக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
1755ல் அண்ணன் வீர அழகுமுத்துக்கோன் தலைமையில் நடத்திய போரில் சின்ன அழகுமுத்து பெருமாள் கோயில் வாசலில் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தார்.
== ஆங்கிலேயர்களுக்கு எதிராக ==
முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்தும், [[பாளையக்காரர்கள்]] ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுக்கவும் செய்தார், வீர அழகுமுத்துக்கோன். தென் தமிழகத்தில் மதுரையை மையமாக வைத்து 72 பாளையங்கள் உள்ளன. அதில் மிகப்பெரிய ஆட்சிகளை கொண்டிருக்கும் இரண்டு பாளையமான பாஞ்சாலங்குறிச்சி மற்றும் எட்டயபுரம் பகுதிகளை கைப்பற்றி விட்டால் மற்ற பகுதிகளை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி எண்ணியது. 1750 ல் எட்டையபுரம் பகுதியை வரி செலுத்துமாறு ஆங்கிலேயர்கள் எச்சரித்தனர். இதனை கடுமையாக எதிர்த்த அழகுமுத்துக்கோன் பாளையக்காரர்கள் யாரும் கப்பம் கட்ட கூடாது என்று கட்டளையிட்டு வணிகம் செய்ய வந்த வெள்ளையனுக்கு நாங்கள் கப்பம் கட்ட முடியாது என ஓலை அனுப்பினார். 1750 ல் மன்னராக முடி சூடிய முதல் ஆண்டே வெள்ளையர்களை எதிர்க்க துணிந்தார்.இந்தியாவில் முதன் முதலில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களை ஒன்று திரட்டினார். இதன்படி எட்டயபுரம் மன்னரான ஜெகவீரராம எட்டப்பரும் 1751ல் நெற்கட்டான் செவ்வல் பாளையம் பகுதியில் புலித்தேவனும் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட மறுத்துவிட்டனர். இதனால் அழகுமுத்துக்கோன் மற்றும் பூலித்தேவன் இடையே நட்பு உருவானது.பாளையக்காரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட வேண்டும் என்று சுற்றி உள்ள பாளையங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அனைத்து பாளையக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அழகுமுத்துக்கோன் திட்டமிட்டபடி ஒரு சில பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்தவில்லை. வெள்ளையர்களுக்கு எதிராக கட்டாலங்குளம் மற்றும் எட்டயபுரம் படைகள் போருக்கு தயாராகிக்கொண்டிருந்தது. அழகுமுத்துக்கோன் தன்னை எதிர்த்து பாளையக்காரர்களை திரட்டுவது ஆங்கிலேயர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமின்றி அழகுமுத்துக்கோன் காட்டில் போர்வீரர்களை தயார் செய்து கொண்டிருக்கும் போது மேற்கே ஆங்கிலேய படையை எதிர்க்க பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் உதவியை நாடியதால் அழகுமுத்துக்கோன் படையும் பூலித்தேவனுக்கு உதவி பல போர்களை நிகழ்த்தி வெற்றி கண்டது. மேலும் தங்களது படையில் திருவிதாங்கூர் படையும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சேர்ந்து கொண்டது. அதில் கர்னல் எரோன் கெரான் மற்றும் மாபூஸ்கானை அடுத்தடுத்து வென்றனர்.இவரது படை பூலித்தேவன் உட்பட ஒரு சில பாளையக்காரர்களுடன் சேர்ந்து போர் புரிந்தது. 1755ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வரி வசூல் செய்ய அதிகாரிகளை அனுப்பியது இதனால் கோபமுற்ற அழகுமுத்துக்கோன் தனது வாளால் ஆங்கிலேயர்களை வெட்டி தன் உயிர் இருக்கும் வரை தனது தாய் மண்ணில் இருந்து ஒரு பிடி மண் கூட கப்பமாக கட்ட முடியாது என கர்ஜனைவெள்ளையப்படையினை செய்தார்விரட்டி அடித்தார். பிறகு எட்டயபுரமும் கப்பம் கட்ட கூடாது என எட்டையபுரம் மன்னர் ஜெகவீரராம எட்டப்பருக்கு கடிதம் மூலமாக செய்தி அனுப்பினார்.அதனை தொடர்ந்து ஆங்கிலேய படைகளுக்கும் அழகுமுத்துக்கோன் படைகளுக்கும் இடையே பல கிளர்ச்சிகளும் வன்முறைகளும் வெடித்தன. அதில் ஆங்கிலேயர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.இரண்டு ஆண்டு காலமாக எட்டயபுரம்,கட்டாலங்குளம் பகுதிகள் கப்பம் கட்டாததால் கோபமுற்ற ஆங்கிலேய அரசு 1757ல் யூசுப் கான் என்ற அதிகாரியை வரி வசூலிக்க நியமித்தது.யூசுப் கானின் மிகப்பெரும் படைக்கு எதிராக 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போராகும்.
<ref name=Madhan>{{Cite book|last=Kumar|first=Madhan|url=https://books.google.com/books?id=XJ8rDwAAQBAJ&pg=PA113|title=Thamizh Is Not Just A Language: The Valour|date=2017|publisher=Educreation Publishing|isbn=978-1-5457-0304-5|location=New Delhi|pages=113|language=en}}</ref>
<ref name=thehindu>{{Cite news|url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tributes-paid-to-alagumuthu-kone/article7412824.ece|title=Tributes paid to Alagumuthu Kone|date=12 July 2015|work=The Hindu|access-date=11 April 2020|language=en-IN|issn=0971-751X}}</ref>எட்டையாபுரம் சமஸ்தானத்தில் வேலை செய்த சுவாமி தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்ட வம்சமணி தீபிகை பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று கூறிய நெஞ்சுரம் மிக்கவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== பெத்தநாயக்கனூர் போர் ==
அழகுமுத்துக்கோன் வீரத்தை பற்றி அறிந்து கொண்ட மருதநாயகம் நேரடியாக போரிட்டால் அழகுமுத்துக்கோனை வெல்ல முடியாது என எண்ணி இரவோடு இரவாக எந்த ஒரு அறிவிப்பும் இன்றி பெத்தநாயக்கனூர் கோட்டயை முற்றுகையிட்டான். இவனது சூழ்ச்சி மிகுந்த போரில் பல போர் வீரர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர். வீர அழகுமுத்துக்கோனுக்கும், மருதநாயகம் பிள்ளைக்கும் (கான் சாஹிப்) பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. வீர அழகுமுத்துவின் வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு [[பீரங்கி]] முன் நிறுத்தப்பட்டு வரி செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் உயிர் மிஞ்சும் என்று கேட்டும் வீர அழகுமுத்துக்கோன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/அழகு_முத்துக்கோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது