பாவலர் சரித்திர தீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பாவலர் சரித்திர தீபகம்''' என்பது [[தமிழ் மொழி]]யில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் [[வரலாறு|வரலாற்று]]த் தொகுப்புநூல்தொகுப்பு நூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற [[ஆங்கிலம்|ஆங்கில]]த் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் [[சைமன் காசிச்செட்டி]] என்பரால் எழுதி வெளியிடப்பட்ட [[தமிழ் புளூட்டாக்]] என்னும் நூலினைத் தழுவி எழுதப்பட்டதே இந்த நூல். தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் வரலாற்று நூல் இதுவே. இது [[யாழ்ப்பாணம்]], [[மானிப்பாய்|மானிப்பா]]யிலிருந்த "ஸ்ட்ரோங் அண்ட் அஸ்பரி" அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு 1888 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
 
==பின்னணி==
வரிசை 5:
 
==உள்ளடக்கம்==
[[தமிழ் புளூட்டாக்]] நூலில் குறிப்பிடப்பட்ட 202 புலவர்களில் 201 புலவர்கள் பாவலர் சரித்திர தீபகத்திலும் இடம் பெறுகின்றனர். இவர்களைவிட மேலதிகமாக 209 புலவர்களைச் சேர்த்து 410 புலவர்கள் பற்றிய தகவல்கள் தரும் நூலாகப் பாவலர் சரித்திர தீபகம் ஆக்கப்பட்டுள்ளது. காசிச் செட்டியவர்களின் நூலில் 202 புலவர்களில் 13 பேர் மட்டுமே [[இலங்கை]]யைச் சேர்ந்தவர்கள். சதாசிவம்பிள்ளை அவர்கள் மேலும் 69 இலங்கைப் புலவர்களைச் சேர்த்து [[ஈழம்|ஈழ]]த்துப் புலவர்களின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தினார்.
 
==இரண்டாவது பதிப்பு==
ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை பேராசிரியர் [[பொ. பூலோகசிங்கம்]] ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுத்த முதலிரு பாகங்களும் 1975 இலும் 1979 இலும் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்தன.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/பாவலர்_சரித்திர_தீபகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது