தீயணைப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி.
வரிசை 1:
[[File:FireExtinguisherABC.jpg|thumb|170px|தீயணைப்பான்]]
'''தீயணைப்பான்''' (Fire Extinguisher) எனப்படுவது குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தீப் பற்றல், பரவல்களை தடுத்துத் தீ அணைக்க உதவும் ஒரு கருவி ஆகும். வாகனங்களில் (ஊர்திகளில்) பயன்படுத்தப்படும் சிறிய ரக 500 கிராம் தீயணைப்பான்கள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் 14 [[கிலோ கிராம்|கிலோ]] தீயணைப்பான்கள் வரை இன்று பல அளவுகளில் தீயணைப்பான்கள் கிடைக்கப்பெறுகின்றன. இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. முதலாவது அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பான். இவ்வகை தீயணைப்பான்களில் நீர், வாயு ([[வளிமம்]]) போன்ற அடிப்படை தீயணைப்புக் காரணிகள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்படுகின்றன. மற்றது அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான். இவ்வகை தீயணைப்பான்களில் அடிப்படை தீயணைப்பு காரணிகளான வேதிப்பொருள்கள் ஒரே உருளையின் இருவேறு கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்படுகின்றன. இந்த வகை தீயணைப்பான்களின் தலை தாக்கப்படும்பொழுது இந்த கண்ணாடி குடுவையானது உடைந்து, இருவேறு வேதிப்பொருள்களும் ஒன்று சேர்கின்றன. இதனால் ஏற்படும் வேதிவினையால் உருவாகும் வேதிப்பொருளானது அதிக அழுத்தத்தில் விரைந்து வெளியேறி நெருப்பை அணைக்கிறது.
<br />
 
"https://ta.wikipedia.org/wiki/தீயணைப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது