அசிட்டிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் [[பிணைவு வடிகை]](condensation reaction) என்னும் வேதி வினையின்படி [[அசிட்டிக் அன்ஐதரைடு]]அல்லது ''நீரற்ற அசிட்டிக்கு'' உருவாகின்றது. இந்த பிணைவு வடிகை வேதி வினையின் வழி நீர் மூலக்கூறு விலகி வெளிப்படுவதால் இதனை "வடிகை" (இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைவுறும் பொழுது ஏற்படும் நீர்வடிகை) என்கிறோம். நீரற்ற அசிட்டிக்கு (அசிட்டிக் அன்ஐதரைடு) படைப்பதற்காகப் பயன்படும் அசிட்டிக் காடி உலகளாவிய அளவில் அசிட்டிக் காடி உற்பத்தியில் ஏறத்தாழ 25% முதல் 30% ஆகும். அசிட்டிக் அன்ஐதரைடை அசிட்டிக் காடி இல்லாமலே [[மெத்தனால் கார்போனைல் ஆக்கம்]] என்னும் முறைப்படியும், காட்டிவா (Cativa) செய்முறைப்படியும் படைக்கமுடியும்.
 
[[Image:Acetic acid condensation.png|612px|thumb|center|இரண்டு அசிட்டிக் காடி சேர்மங்கள் பிணைந்து நிகழும் [[பிணைவு வடிகை]] முறைப்படி ''நீரற்ற அசிட்டிக்கு'' எனப்படும் ''அசிட்டிக் அன்ஐதரைடு'' உருவாகுதல். நீர் (H<sub>2</sub>O தனியாகப் பிரிவதைப் படத்தில் காணலாம்]]
 
அசிட்டிக் அன்ஐதரைடு வலுவான ஒரு அசிட்டைலாக்கும் கருவிப் பொருள். இதன் முதன்மையான பயன்பாடு செயற்கை நெசவாலைகளில் பயன்படும் செல்லுலோசு அசிட்டேட் என்னும் பொருளைச் செய்வதாகும். ஒளிப்படக்கலைத் துறையிலும் ஒளிப்படப் படலத்தில் (photographic film) இது பயன்படுத்தப்படுகின்றது. ஆசுப்பிரின் (aspirin), [[எரோயின்]] (heroin) முதலான மருந்துகள் செய்யவும் பிற [[சேர்மம்|சேர்மங்கள்]] உருவாக்கவும் அசிட்டிக் அன்ஐதரைடு பயன்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/அசிட்டிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது