நிதியறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''வரவு செலவுத் திட்டம்''' என்பது ஒரு நிறுவனத்தில் அல்லது அரசில் இனி வரும் ஆண்டில் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏற்பட இருக்கும் வரவு செலவுகளுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட நோக்கங்களுடன் திட்டமிட்டுப் பணம், பொருள் முதலிவற்றைப் ஒழுங்கு நிறுத்துவதாகும் இதனை ஆங்கிலத்தில் பட்செட் (''budget'') என்னும் பிரான்சிய மொழிவழி பெற்றச் சொல்லால் குறிப்பர். [[சிற்றினப்பொருளியல்|சிறு பொருள்முதலியல்]] அல்லது நுண்ணியல் பொருளியல் (மைக்ரோ-எக்கனாமிக்ஃசு) துறையில் வரவு-செலவுத்திட்டம் ஒரு முக்கிய கருத்துரு.
 
சுருக்கமாக, வரவு செலவுத் திட்டத்தின் குறிக்கோள்கள்:
#இனி வரவிருக்கும் காலத்தில் பணக்கணக்கில் வரவுகளும் செலவுகளும் காலக்கெடுவுடன் முன்கணிப்பு செய்து (குறிப்பிட்ட ஒப்பியலாக்கத்தின் (மாதிரிகளின்)படி), அதற்கேற்ப ஒரு தொழில், அல்லது நிறுவன நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டுமென கூறுவது
#உண்மையான தொழில்நடப்புகளை வரவு-செலவுத்திட்டத்தில் முன்கணித்தவாறு நடத்த பணப்புழக்கம்/நடவடிக்கைகள் எடுப்பது.
 
==நல்ல பட்செட்டின் விதிமுறைகள்==
வரவு செலவுத் திட்டம் உருவாக்க சில அடிப்படை விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை,
 
===ஓராண்டு அடிப்படையிலானது===
நாடாளுமன்றமானது செயலாட்சியருக்கு (executive) ஓராண்டிற்காக மட்டுமே நிதி அளிக்க வேண்டும் என்பது நிதியியலில் சிறந்த கொள்கையாகக் கருதப்படுகிறது. காரணம், 1. செயலாட்சியருக்குத் தேவையான நிதி அதிகாரத்தை ஓராண்டுக்கு வழங்குவது ஏற்கத்தக்கது, 2. பட்செட்டை திறன்பட நடைமுறைப்படுத்துவதற்கு செயலாட்சியருக்குத் தேவையான குறைந்தபட்சக் கால அளவு ஓராண்டு, 3. மனிதர்களின் கணக்கீடுகள் ஆண்டை அடிப்படையாகக் கொண்டுள்ள மரபு. இந்தியா மற்றும் பிரிட்டனில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச்சு மாதம் 31-ஆம் தேதி வரையிலும், அமெரிக்காவில் சூலை மாதம் 1-ஆம் தேதி முதல் சூன் மாதம் 30-ஆம் தேதி வரையிலும், பிரான்சு நாட்டில் சனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி வரையிலும் வரவு செலவுத் திட்டக் காலமாக பின்பற்றப்படுகிறது.
 
===துறை அடிப்படையிலானது===
ஒவ்வொரு துறையின் வருவாய் மற்றும் செலவு மதிப்பீடுகள் அந்தத் துறையாலேயே தயாரிக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை ஒவ்வொரு துறையின் திட்டங்கள், செயல்கள் ஆகியவற்றை தெளிவாகக் காட்டுவதோடு, அந்தத் துறையின் நிதி பலத்தையும் உறுதிப்படுத்தும். அதே நேரம், அந்தத் துறையின் செயல்திட்டங்களை வேறு துறைகள் நடைமுறைப்படுத்தினால் அது பற்றிய அடிக் குறிப்பையும் தனது மதிப்பீட்டு அறிக்கையில் தொடர்புடைய துறை தெரிவிக்க வேண்டும்.
 
===சமமானதாக இருத்தல்===
வருவாய் மதிப்பீட்டை விட செலவு மதிப்பீடு அதிகமாக இருக்கக் கூடாது. அதாவது, செலவு மற்றும் வருவாய் மதிப்பீடுகள் சம அளவில் இருக்க வேண்டும். செலவை விட வருவாய் அதிகமாக இருந்தால் அது உபரி அல்லது எச்ச பட்செட் (surplus budget) என்றும், வருவாயை விட செலவு அதிகமாக இருந்தால் அது பற்றாக்குறை பட்செட் (Deficit budget) என்றும் அழைக்கப்படும்.
 
===ஒரே வரவு-செலவுத் திட்டம்===
அரசானது அனைத்துத் துறைகளின் வருவாய், செலவுகளை ஒரே பட்செட்டில் உட்படுத்த வேண்டும். இதற்கு ஒற்றை பட்செட் (single budget) என்று பெயர். துறைதோறும் தனித்தனியாக உருவாக்கினால் அது பன்மை பட்செட் அல்லது பன்மை வரவு செலவுத் திட்டம் (plural budget) எனப்படும். பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒற்றை பட்செட் முறையும், பிரான்சு, சுவிட்சர்லாந்து, செர்மனி ஆகிய நாடுகள் பன்மை பட்செட் முûறையும், இந்தியா இரண்டு பட்செட் முறையும் (two budget) கடைப்பிடிக்கின்றன.
 
===நிகரமாக அல்லாமல் மொத்தமாக இருத்தல்===
அரசின் வருவாய் மற்றும் செலவு பரிமாற்றத்தை வரவு செலவுத் திட்டத்தில் மொத்தமாகக் குறிப்பிட வேண்டும். உபரி அல்லது பற்றாக்குறை என்று நிகர அளவில் கூறக் கூடாது.
 
===துல்லியத்தன்மை===
வரவு செலவுத் திட்ட மதிப்பீடு மிகச் சரியான அளவினதாக இருத்தல் வேண்டும். மீமதிப்பீடு (overestimate) அதிக வரிவிதிப்பையும் குறை மதிப்பீடு (underestimate) திட்டங்களை செயல்படுத்துவதில் திறனின்மையையும் ஏற்படுத்தும்.
 
===வருவாய், மூலதனப் பகுதிகளைப் பிரித்தல்===
அரசின் நிதி நடவடிக்கைகளில் வருவாய் மற்றும் மூலதன செலவுகளைத் தனித்தனியே பிரித்து அரசை நடத்துவதற்கான செலவை [[வருவாய் பட்செட்]]டிலும் (revenue budget), முதலீடு தொடர்பானவற்றை [[மூலதன பட்செட்]]டிலும் (capital buddget) குறிப்பிட வேண்டும். வருவாய் பட்செட்டுக்கு அரசின் நடப்பு வருவாயிலிருந்தும் மூலதன பட்செட்டுக்கு அரசின் சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றின் மூலம் நிதியளிக்கப்படும்.
 
 
 
 
 
==தொழில் துவக்க நிலை வரவு செலவுத் திட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/நிதியறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது