காரை சுந்தரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கவிஞர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை (20.05.1938 - 21.09.2005) பிறப்பு: கள...
(வேறுபாடு ஏதுமில்லை)

15:33, 19 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

கவிஞர் கலாநிதி காரை செ.சுந்தரம்பிள்ளை (20.05.1938 - 21.09.2005)

பிறப்பு: களபூமி, காரைநகர், யாழ்ப்பாணம்

தந்தை தாய்: செல்லர் தங்கம் தம்பதிகள்

ஆரம்பக் கல்வி: யா/ஊரி காரைநகர் த.க. பாடசாலை

இடைநிலைக் கல்வி: யா/ புனித அந்தோனியார் கல்லூரி, ஊர்காவற்துறை

உயர்நிலைக் கல்வி: யா/விக்ரோரியாக் கல்லூரி, சுழிபுரம்

பல்கலைக் கழகக் கல்வி: அக்குவனெஸ் பல்கலைகழக கல்லூரி, கொழும்பு

கல்வித்தகமைகள்: B.A (London), M.Ed, M.Phil (Colombo), Ph.D (Jaffna)

தொழில்த் தகமைகள்: Theacher counsellor, Dip-in-Ed, Dip-in-Drama & Theatre Arts

மொழிப்பயிற்ச்சியில் முக்கிய ஆசான்கள்:

தமிழ் மொழி: பண்டித வித்வான் க.கி.நடரஜன் பண்டித வகுப்பு:- வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க.வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை இலக்கண இலக்கிய நூல்களை திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆழ்மாகப் பயிற்றிவித்தவர் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார் இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவர் ஆ.சபாரத்தினம்

ஆங்கிலமொழி: எஸ்.செல்லத்துரை, ஜோர்ச் மனுவேற்பிள்ளை, அன்ரன் யேசுதாசன் சேக்ஸ்பியரையும் முக்கியமான வேறு ஆங்கில நூல்களையும் முறையாகக் கற்பித்தவர் எம்.எம்.துரைசிங்கம்

சமஸ்கிருத மொழி: கே.நாகரத்தினம்(உடுவில்), பிரமக்ஷி சீதாராம சாஸ்திரிகள், ஆனந்த குருகே C.C.S

பாளி மொழி: நாகரத்தினம் (சண்டிலிப்பாய்)

சிங்கள மொழி: அடிபடைச் சிங்களம் வண. மகாநாம தேரர் (ஹெம்மாதகம)

தொழில் விபரம்:

ஆசிரியராக:(ஜூலை 1960 இல் இருந்து)

சென் யோசேப் கல்லூரி, மருதானை, கொழும்பு கே/ஹெம்மாதகம முஸ்லிம் ம.வி. கே/மாவனல்ல சஹிரா கல்லூரி யா/தேவரையாளி இந்துக் கல்லூரி யா/ஒஸ்மானியாக் கல்லூரி யா/யாழ் இந்துக் கல்லூரி

கல்லூரி அதிபராக: யா/காரைநகர் இந்துக் கல்லூரி

விரிவுரையாளாராக: பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை

                  கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை (சிரேஸ்ட விரிவுரையாளர் S.L.E.A.S II)

கலாசாலை அதிபராக: தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை

                    கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை

இடைவரவு விரிவுரையாளராக:

திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்) யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்) யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்)

ஆசிரிய சேவை 37 வருடங்கள். இவற்றுள் 15 வருட கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.

கவிதைத்துறையில் ஊக்கியவர்கள்: பண்டித வித்துவான் க.கி.நடராஜன் B.O.L. தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார்

எழுத்துத்துறையில் ஊக்கையவர்கள்: அ.செ.முருகானந்தன் (ஈழநாடு) இரசிகமணி கனக செந்தில்நாதன் மதுரகவி இ.நாகராஜன்

நடிப்புத்துறையில் வழிகாட்டியவர்கள்: ஆசிரியர் பர்ணாந்து ஆசிரியர் ஆ.முருகேசு (தாய் மாமனார்)

நாடக ஆய்வுத்துறையில் வழிகாட்டியோர்: பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராசிரியர் கா.சிவத்தம்பி

நடிப்புத்துறையில் பயிற்சியளித்தோர்:

1.பாடசாலை மட்டத்தில்

ஆசிரியர் எஸ்.பர்னாந்து, ஆ.முருகேசு(தாய் மாமனார்)

2.பல்கலைக்கழக மட்டத்தில்

தம்மஜாகொட, ஹென்றி ஜெயசேன, பொன்சேகா

3.இசை நாடக அனுபவம்பெற உதவியோர்

ஆசிரியர் ஆ.முருகேசு, நடிகமணி வி.வி.வைரமுத்து

4.நாட்டுக்கூத்து ஆட்டப் பயிற்சியளித்தவர்

அனுமார் ஆண்டி எனப் புகழ்பெற்ற அண்ணாவியார் ஆண்டிஐயா(பெரிய தகப்பனார்)

பேச்சுத்துரையில் ஊக்கியோர்: எம்.பஸ்தியாம்பிள்ளை, க.கி.நடராஜன்

கவியரங்கம், பட்டிமன்றம் ஏறவைத்தவர்: இரசிகமணி கனக செந்தில்நாதன்

நூல்களை வெளியிட்டு மேலும் பிரபலப்படுத்தியவர்: ஒருசாலை மாணவனும், பாரதி பதிப்பக உரிமையாளருமான சங்கர்

முதலில் ஆடிய நாட்டுக்கூத்து: இரணிய சம்ஹாரம் - 'பாத்திரம்' பிரகலாதன்

முதலில் நடித்த ஆங்கில நாடகம்: Merchant oa Venice -'பாத்திரம்' Portia

முதலில் நடித்த சமூக நாடகம்: பராசக்தி - 'பாத்திரம்' கல்யாணி

முதலில் பிரசுரமான கவிதை: புகைவண்டி - வெளிவந்த பத்திரிகை பூஞ்சோலை, சென்னை. இப் பத்திரிகையின் ஆசிரியர் அழ வள்ளியப்பா. இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின.

காலப்போக்கில் இலங்கைப் பத்திரிகைகள் அனைத்திலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின.

இலக்கியச் சேவையும் கலைச்சேவையும்:

ஈடுபாடுள்ள துறைகள்:கவிதை, கட்டுரை, நாடகம், நாடக ஆய்வு, விமர்சனம், நாடகத் தயாரிப்பு, சொற்பொழிவு

முக்கிய கவனம் செலுத்தும் துறைகள்: கவிதை,நாடக ஆய்வு, இசை நாடகம், நாட்டுக்கூத்து, சொற்பொழிவு

எழுதிவெளியிட்ட நூல்கள்:

கவிதை நூல்கள்:

தேனாறு(1968) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது சங்கிலியம்(1970) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது தவம்(1971) உறவும் துறவும்(1985) பாதை மாறியபோது(1986) காவேரி(1993)

ஆய்வு நூல்கள்:

ஈழத்து இசை நாடக வரலாறு(1990) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது இந்து நாகரிகத்திற்கலை(1994) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும்(1996) - சாகித்திய மண்டல பரிசு பெற்றது சிங்கள பாரம்பரிய அரங்கம்(1997) ஈழத்து மலையகக் கூத்துக்கள்(2006)- இறுதியாக எழுதிய நூல்

ஏனைய பரிசுகள்: அகில இலங்கைரீதியாக நடைபெற்ற போட்டிகள்

1. பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும் 2. யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு 3. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு 4. 'சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு 5. தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு 6. யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்ற கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும் விருதும் 7. ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசு 8. யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக்கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது

யாழ்ப்பாண மாநகரசபை மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதென்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேடையேற்றிய முக்கிய நாடகங்கள்:

சமூக நாடகங்கள்: தரகர் தம்பர், தம்பி படிக்கிறான், வாழ்வும் தாழ்வும், சினிமா மோகம், சித்திரமே சித்திரமே

இதிகாச புராண நாடகங்கள்: பக்த நந்தனார், கர்ணன், சகுந்தலை, தயமந்தி, வில்லொடித்த விதுரன், சிற்பியின் காதல்

ஆட்ட நாட்டுக் கூத்துக்கள்: பாஞ்சாலி சபதம், மூவிராசாக்கள், மித்தா மாணிக்கமா, காமன் கூத்து

சிறுவர் நாடகங்கள்: மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், பாவம் நரியார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரை_சுந்தரம்பிள்ளை&oldid=429494" இலிருந்து மீள்விக்கப்பட்டது