மதுரை மணி ஐயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: மதுரை மணி அய்யர் (1912-1968) கருநாடக இசையுலகில் புகழ்பெற்ற ஒரு இசை...
 
சிNo edit summary
வரிசை 1:
'''மதுரை மணி அய்யர்ஐயர்''' ([[அக்டோபர் 25]], [[1912]] - [[ஜூன் 8]], [[1968]]) [[கருநாடக இசையுலகில்இசை]]யுலகில் புகழ்பெற்ற ஒரு இசைகலைஞர் ஆவார்இசைக்கலைஞர். [[சுவரம்]] பாடுவதில் வல்லுனராக கருதப்பட்டார். இவரின் ஜனன பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது. [[மதுரை]]யில் எம்.எஸ்.ராமசுவாமி ஐயர், சுப்புலக்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். தகப்பனார் ராமசுவாமி ஐயர், அக்காலத்தில் பிரபலமான இசைக்கலைஞரான வித்துவான் புஷ்பவனம் அவர்களின் சகோதரர்.
 
சிறு வயதிலேயே காருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். இவரது முதலாவது ஆசிரியர் ஸ்ரீ ராகம் பாகவதர். ராகம் பாகவதர் [[எட்டயபுரம்]] ராமச்சந்திர பாகவதருடைய மாணவர். அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவரது மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார்.
 
சங்கீத கலாநிதி, கான கலாதரர், இசைப் பேரறிஞர், இன்னும் எவ்வளவோ பட்டங்களைப் பெற்ற மணி ஐயர் தம் பெரு நோய் காரணமாக திருமணம் முடிக்கவில்லை.
 
[[சுவரம்]] பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அந்தந்த கிருதிக்குத் தக்கவாறு சுருக்கமாகவோ, நடுத்தரமாகவோ, விவரித்தோ பாடும் திறன் மணியின் சிறப்பு. அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். [[நளினகாந்தி]] போன்ற அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர்.
 
[[பகுப்பு:1912 பிறப்புகள்]]
[[பகுப்பு:1968 இறப்புகள்]]
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]]
 
[[en:Madurai Mani Iyer]]
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_மணி_ஐயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது