ஆ. கந்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
'''ஆ. கந்தையா''' கட்டுரை, விமரிசனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ளவர். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைப்]] பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது [[சிட்னி]]யில் வசித்து வருகிறார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
 
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் [[மு. வரதராசன்|மு. வரதராசனாரின்]] அன்புக்குரிய மாணவராகத் திகழ்ந்து அவரது நெறியில் ''தந்தையின் பரிசு'' என்னும் நூலை எழுதியிருக்கிறார். [[இலண்டன்]] பல்கலைக்கழகத்தில் 'பக்தி இலக்கியம்' பற்றி ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றவர். கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக கடமையாற்றினார். இலண்டன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்திலும் சிட்னிப் பல்கலைக்கழகத்திலும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பித்தார்.
 
1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியத்]] திறந்த பல்கலைக்கழகத்தில் [[தொலைக்கல்வி]] பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
 
[[தமிழ்]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் "மலரும் மணமும்" நூல் அமைந்தது. 1996ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய பணிகளுக்காக இலங்கை அரசின் "கலாகீர்த்தி" விருதைப் பெற்றவர்.
 
சமய நூல்கள் எழுதியமையால் மதுரை ஆதீனத்தால் சிவநெறித் தொண்டன் (1965) எனும் பட்டம் பெற்றவர். மேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தி வருபவர். [[அவுஸ்திரேலியா]]வுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதுபவர்.
 
மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இவர் அவுஸ்திரேலிய SBS தொலைக்காட்சிக்காக [[கமலஹாசன்]] நடித்த [[நாயகன்]] திரைப்படத்துக்கு ஆங்கில உபதலைப்புகளை எழுதினார்.
==விருதுகள்==
*1996ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் ஆற்றிய பணிகளுக்காக இலங்கை அரசின் ''கலாகீர்த்தி'' விருதைப் பெற்றவர்.
*சமய நூல்கள் எழுதியமையால் மதுரை ஆதீனத்தால் ''சிவநெறித் தொண்டன்'' (1965) எனும் பட்டம் பெற்றவர்.
 
==வெளிவந்த நூல்கள்==
===புலம் பெயர முன்னர் எழுதியவை===
*''பரதநாட்டிய முத்திரைகள்'' (1990)
*''திருக்கேதீஸ்வரம்''
*''தமிழ்நூல் பட்டியல்'' (1996)
*''இந்து சமயம்'' (13 பதிப்புகள்)
*''மழலை அமுதம்'' (சிறுவர் பாடல் தொகுப்பு, 1995)
*''மலரும் மணமும்''
*''மார்கழி மங்கையர்'' (1995)
*''இலக்கிய வளம்''
*''சிந்தனை வளம்''
*''கற்பனை வளம்''
*''உள்ளத்தனையது உயர்வு''
*''தந்தையின் பரிசு''
*''செவ்வேள்''
*''ஞானச்சுடர்''
*''ஒற்றுமையும் ஒப்புமையும்''
*''தொலைக் கல்வி''
*''தொலைக் கற்பித்தல்''
*''சீராக்கம் வேண்டாமா?''
*''Mystic Love''
*''Cult and Worship of Murukan''
*''Muruka Worship and the Concept of Bhakti''
 
===புலம் பெயர்ந்த பின்னர் எழுதிவை===
*''Tamils in Australia'' - A brief Survey (1998)
*''மழலை அமுதம்'' (சிறுவர் பாடல் தொகுப்பு, 1995)
*''தமிழ் இலக்கியம்'' - Tamil Literature (1996)
*''தமிழ் நூல் பட்டியல்'' (மாநில நூலகம்)
*''இலங்கைத் தமிழ் அகதிகள்'' - கைந்நூல் (1998)
*''Tamil Literature - A brief survey''
*''Tamils in Australia - An updated survey''
*''ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழி கற்பித்தல்''
*''HinduTeaching TemplesTamil in Australia''
*''Tamil without a Teacher - Book I''
*''Tamil without Teacher - Book II''
*''Quest for Tamil Identity''
*''கங்காரு தாவித் தாவி ஓடுவதேன்?'' (சிறுவர் இலக்கியம், 1999)
*''வால் நீண்டது எப்படி?'' (சிறுவர் இலக்கியம், 1999)
*''Mistic Love in the Thevaram''
*''Hindu Temples in Australia''
*''கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும்'' (2004)
*''கங்காரு நாட்டில் கன்னித் தமிழ்'' (2000)
*''A Selected Glossary for Australian Tamils''
*''Gleanings from Tirukkural for a Multicultural Society''
*''Tirukkural, Selected couplets''
*''Murukan, God of Tamils''
*''மார்கழி மங்கையர்'' (1995)
*''இலங்கைத் தமிழ் அகதிகள்'' - கைந்நூல் (1998)
*''Tamil Community in Australia''
*''ஆஸ்திரேலியாவில் இந்துக் கோயில்கள்''
*''கங்காரு நாட்டில் தமிழரும் தமிழும்'' (2004)
*''Hindu Temples in Australia''
*''பரதநாட்டிய முத்திரைகள்'' (1990)
*''தமிழ்நூல் பட்டியல்'' (1996)
*''தமிழ் இலக்கியம்'' - Tamil Literature (1996)
*''ஆஸ்திரேலியாவில் ஆடற்கலையும் பாடற்கலையும்'' (2005)
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆ._கந்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது